புதிய அரசின் கீழேயே முஸ்லிம், அரசியல்வாதிகள் இனிமேல் பதவியேற்பார்கள்
அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்வரென, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் இதுவரை இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும், வெகு விரைவில் அவர்களது தீர்மானம் குறித்து அறிந்துக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் திருமணச் சட்டம், விவாகச் சட்டம் திருத்தம் தொடர்பில், கலந்துரையாடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் எவ்வித கட்சித் தாவல்களும் இடம்பெறாதெனத் தெரிவித்துள்ள அவர், தமது அரசியல் ஸ்திரத்தன்மை அவ்வாறே இருக்குமென்றும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
MUSLIMGALUKKU THAWARAMAL KOVLIPPAL
ReplyDeleteKIDSITHU KONDEI IRUKKUM