கோதுமை மா நிறுவனங்களுக்கு, புத்திகவின் எச்சரிக்கை
கோதுமை மாவின் விலையை விரும்பியது போல் அதிகரித்தால், பால் மா நிறுவனங்களை மண்டியிட செய்த விதத்தில், கோதுமை மா நிறுவனங்களையும் மண்டியிட செய்ய நேரிடும் என கைத்தொழில், வாணிபம், நீண்டகாலம் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி பதில் அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று -17- நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விலைகளை அதிகரிக்க முடியாது என சட்டமா அதிபர் கூறியிருக்கும் நிலையில், இரண்டு கோதுமை மா நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளன.
அதிக விலையில் கோதுமையை விற்பனை செய்யும் இடங்களை சுற்றிவளைக்குமாறு நான் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்துள்ளேன். மூன்று மணி நேரத்தில் அப்படியான 51 இடங்களை அதிகாரிகளை சுற்றிவளைத்தனர்.
கோதுமை மா நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது என்றால், அமைச்சு பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை. நான் மரப் பலகைக்குள் நுழைந்த வண்டு போன்றவன். ஒன்றை ஆரம்பித்தால், முன்னோக்கி செல்வேனே அன்றி பின்நோக்கி செல்ல மாட்டேன் எனவும் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment