Header Ads



ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு சஜித் - நவீன் இணைவதே

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு சஜித் பிரேமதாஸ மற்றும் நவீன் திசாநயக்க இருவரும் இணைவதே என்று அந்தன் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். 

நுவரெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

1993ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவும் 1994ம் ஆண்டு தனது தந்தையும் கொலை செய்யப்பட்டதனால் தமக்கு தந்தை வழியாக எதுவும் கிடைக்கவில்லை என்றும் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். 

சஜித் பிரேமதாஸவுக்கும் தனக்கும் பதவி கிடைத்திருப்பது நாட்டு மக்களின் வாக்குப் பலத்தால் என்றும் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். 

கட்சிக்குள் எமக்கு உள்ள எதிர்ப்பு அன்று போல் இன்றும் இருப்பதாக கூறிய அமைச்சர் நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால் சஜித்தும் தானும் இன்றும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக கூறினார். 

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தான் பணியாற்றுவேன் என்று மக்கள் முன்னிலையில் உறுதியளிப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.