Header Ads



இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளுடன், அரசாங்கம் கொஞ்­சிக்­கு­லாவக் கூடாது - ஞான­சார தேரர்

நாட்டில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணித்தல் மற்றும் ஒழுங்­கு­ப­டுத்தல் தொடர்­பான சட்­ட­வ­ரை­பொன்று அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அதில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உலமா சபையின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அரபு மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்க தனி­யான சட்­ட­மொன்­றினை உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சே­னாவின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில்  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, “அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­படும் அரபு மத்­ர­ஸாக்கள் தொடர்­பான சட்­ட­மூ­ல­மொன்று அவ­ச­ர­மாக இயற்­றிக்­கொள்ளும் நட­வ­டிக்கை கைவி­டப்­பட வேண்டும் என நாம் அரசைக் கோரு­கிறோம். இதுவோர் சம­யக்­கு­ழுவின் தேவைக்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் திரை­ம­றைவில் செயற்­ப­டக்­கூ­டாது. மாறாக நாட்­டுக்கும், நாட்டு மக்­க­ளுக்கும் வெளிப்­ப­டை­யாகச் செயற்­பட வேண்டும்.

அரபு மத்­ரஸா தொடர்­பான சட்டம் பற்றி அனைத்து மதத்­த­லை­வர்­களும் அறிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். எந்­தவோர் மதத்­த­லை­வர்­க­ளு­டனும் கலந்­தா­லோ­சி­யாது, பேச்­சு­வார்த்தை நடத்­தாது உலமா சபை அர­சி­யல்­வா­தி­க­ளையும் ஏமாற்றி இதற்­கான நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளதை நாம் எதிர்க்­கிறோம். இந்த சட்­ட­மூலம் நாட்­டுக்கு ஆபத்­தா­ன­தாகும்.

தேர்­தல்கள் அண்­மிக்கும் இந்­தக்­கா­லத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளுடன் கொஞ்­சிக்­கு­லாவ வேண்டாம் என்று அர­சாங்­கத்தை நாம் வேண்­டிக்­கொள்­கிறோம். தேசிய ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் மற்றும் தேசிய தொலைக்­காட்­சி­களில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், இஸ்­லா­மிய மதத்­த­லை­வர்­க­ளுக்கும் ஒதுக்­கப்­படும் நேரம் எங்­க­ளுக்கும் ஒதுக்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கையில் சிக்கியுள்ள இஸ்லாமிய கல்வி மீண்டும் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு கையளிக்கப்படவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படும் அஹதிய்யா பாடசாலைக்குள் நுழைந்துள்ள அடிப்படைவாத ஆசிரியர்களின் கற்றல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்


6 comments:

  1. அடிப்படை வாதம் என்றால் என்னவோ?😜😜😜

    ReplyDelete
  2. Podaaa muttaaal.... Go to MP Ranjan he will tell you what you need!!

    ReplyDelete
  3. நாம் இலங்கையர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. வாருங்கள் யாவரும். நாட்டைக் கட்டியெழுப்புவோம். என்று கோசமிடுவோம் ஞானசாரே.

    ReplyDelete
  4. Iwanukku islam mattumthaan kutramaaha theriuthu...so iwanukku ulla pblm...islam mattume....
    Iwan intha naadu nalla waranumdu illa...iwanukku wanthulla islamiya santhehankalay muraye kattrukkolla wendum...illay enraal iwanukkum iwan sahaakkum islam.periya kutramaahawe pohum...so athuku iwanuku wali pannunaatthan maarum intha naadu...

    ReplyDelete
  5. இந்த சக்கிலி நாயைச் சுருட்டி குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு இந்த நாட்டில் சக்கிலி நாயின் ஆபத்தை அறிந்த நல்ல மனிதர்கள் இருக்கின்றார்களா?

    ReplyDelete
  6. IF ANYONE WENT TO THE JAIL AFTER THE COURT VERDICT OF GUILTY, THEN HE ALWAYS BE A PERSON CONERED BY THE LAW, then how can be lead a society....

    ReplyDelete

Powered by Blogger.