Header Ads



முஸ்ஸம்மிலுக்கு,, ஜமாஅத்தே இஸ்லாமி பதிலடி - அவரது கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என கண்டனம்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸ்ஸம்மில் நேற்று (18.07.2019) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை அடிப்படைவாத அமைப்பாக சித்திரித்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணி (JVP Srilanka) உருவாக்கும் புதிய கூட்டணியில் இஸ்லாமிய அரசை இலக்காகக் கொண்டு செயற்படும் ஜமாஅத்தே இஸ்லாமியும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியைப் பொறுத்தவரை 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. ஆரம்பம் முதலே அமைப்புச் சட்டத்தினூடாக அதனது கொள்கை, இலட்சியங்கள், வழிமுறைகள், செயற்பாடுகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கென்று பல வழிகாட்டல் தத்துவங்கள் உள்ளன.

“இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சகல செயற்பாடுகளும் இஸ்லாத்தின் நடுநிலைக் கோட்பாட்டை பேணியதாக இருக்கும். இஸ்லாம் வலியுறுத்துகின்ற மானிட விழுமியங்களை ஜமாஅத்தே இஸ்லாமி முழுமையாகப் பேணி நடக்கும். ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரில் அல்லது வேறு பெயர்களில் உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ இயங்கும் எந்த இயக்கத்துடனும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எவ்வித கட்டுப்பாட்டுடன் கூடிய தொடர்பையும் கொண்டிராது சுதந்திரமாக இயங்கும். ஜமாஅத்தே இஸ்லாமி தனது செயற்பாடுகளில் சாத்விகமான, சட்டபூர்வமான வழிமுறைகளையே கையாளும். ஜமாஅத்தே இஸ்லாமி கட்சி அரசியலுக்கு அப்பாலிருந்தே செயற்படும்” (யாப்பு உறுப்புரை 6, 7, 8, 9 & 10) முதலான வழிகாட்டல் தத்துவங்களே ஜமாஅத்தே இஸ்லாமியை வழிநடத்தி வருகின்றன.

சுதந்திரமாகவும், தேர்தல், கட்சி அரசியலுக்கு அப்பாலும் இயங்கி வரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, பல்வேறு சிவில் அமைப்புகளுடன் இணைந்தும் தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது. இன, மத, மொழி என்ற குறுகிய எல்லைகளுக்கு அப்பால் மனிதம் வாழ வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்திற்காக உழைக்கின்ற அனைவருடனும் இணைந்து பணியாற்றி வருகிறது. ஒத்த இலக்குகளுடன் பயணிக்கும் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுதல் எனும் அடிப்படையில் நாட்டு நலன்களை முன்னிறுத்தி சிவில் மற்றும் அரசியல் கட்சிகளால் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஒத்துழைப்பு வழங்கி வந்திருக்கிறது.

இந்தப் பின்னணியிலேயே கடந்த 14.07.2019 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் "நாளை நிமித்தம் இன்று" (Today for Tomorrow) எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். புத்திஜீவிகள், இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள், ஜனநாயக அணியினர், சிவில் சமூக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், கலைஞர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றிருந்த இந்த நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். Faris Saly உரை நிகழ்த்தியிருந்தார்.

குறித்த அந்த நிகழ்வை மையப்படுத்தி கருத்துத் தெரிவிக்கும்போதே தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸ்ஸம்மில் அவ்வாறு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இவை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும். இவற்றை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டிக்கிறது.
--
ஊடகப் பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி


குறிப்பு:
"தேசிய மக்கள் சக்தி" நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் நிகழ்த்திய உரையின் சாராம்சம்.

“மனித சமூகத்தின் பெயரால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றவர்கள் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஆவர். அவ்விரு தலைமைகளும் மனிதர்களுக்காக வாழ்ந்த காலமெல்லாம் எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், எப்போதெல்லாம் மனித சமூகத்தின் பெயரால் தாம் வாழ்வதற்காக மதத்தையும் அரசியலையும் பயன்படுத்துகின்ற தலைவர்கள் வந்தனரோ அன்று முதல் மனிதர்கள் அனைவரும் சுரண்டப்பட்டு வருகின்றனர். இதனால் மனித சமூகம் தமது மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை இழந்துள்ளது.

மனித நேய பிரியர்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே ஒடுக்கப்படும் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஆகவே, அவர்கள் மீதுள்ள பொறுப்பை மதத் தலைவர்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் உணர்த்தி, நல்ல மனிதர்களோடு இணைந்து நல்லதொரு சமூகம் காண உழைக்க முயற்சி எடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும்…”

4 comments:

  1. He is not Musammil or Muslim, He already changed his name in front of a bikkhu as Bandara or something.

    ReplyDelete
  2. அதையும் மதித்து மறுப்பு வெளியிட வேண்டுமா?
    தயவு செய்து தாங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  3. பொது விடயங்களில் அனவரும் கருத்து பதிவிட உரிமை உள்ளது.ஆனால் Muslim களின் மதம் சம்பந்தப்பட்ட உள் விவகாரங்களில் கண்ட கண்ட தமிழ் தரப்பு நாய்களுக்கு கருத்து பதிவிட உரிமையில்லை,புரிந்து கொண்ட நாய்கல் வாலை சுருட்டி ஒதுங்குவது நாகரீகம்.1000 சாதிகலும் 1000 சாதிகலுக்கும் 1000 கோவில்களும் கோவில்களுக்குல்லேயே பாலியல் சிலைகளும் அதற்கு முன்பாகவே கதவுகலை மூடிக்கொண்டு காம லீலைகலும்,ஆசிரமம் எனும் பெயரில் சாமியார்கள் நடத்தும் பாலியல் வேட்டைகலும் எங்களிடம் இல்லை என்பதனை சொல்லிக் கொள்கிறோம்.இதில் வேடிக்கை சில வயசான,கிழ ஆனால் அமைதியான இனவாதிகலுக்கும் சேர்த்துத்தான்.

    ReplyDelete
  4. முஸம்மில் என்பவன் யார்? அவன் எமத் Islam மதத்தவனா என்பது எனக்கே இன்னும் புரியவில்லை,தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கல் இவன் Muslim பெயரை வைத்துல்லானா அல்லது இந்த பெயர் கொண்டு புனைப் பெயரில் அழைக்கப் படுகின்ரானா? தெரிந்த யாராவது சொல்லுங்கல்.

    ReplyDelete

Powered by Blogger.