Header Ads



காவி உடை­ தரித்தோரிடம், நாட்டைத் தாரை­வார்ப்­போமா...?

நீதியை, ஒழுக்­கத்தை நேசிக்கும் மக்கள் நாட்­டிலே தங்கள் பாட்டில் அமை­தி­யாக வாழ்ந்து வரு­கையில் காவி­த­ரித்த காடை­யர்­க­ளாகச் சில பிக்­குகள் நாட்­டையே குழப்­பிக்­கொண்டு, இன­வா­தத்தைத் தூண்டி, சட்­டத்தின் ஆட்­சிக்கே சவால்­விட்டுக் கொண்டு சுதந்­தி­ர­மாக இயங்கி வரு­கின்­றனர்.

ராஜ­பக்ச சிந்­த­னையால் உரு­வாக்கிப் போஷிக்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்ட இவர்­க­ளுக்கு சட்­டத்தின் பாது­காப்பும் இருப்­ப­தாகத் தெரி­கி­றது. இக்­காவிப் பயங்­க­ர­வாதம் இப்­போது அதன் உச்­சத்தைத் தொட்­டுள்­ளது. நாட்டின் சட்­டமும் சட்­டத்தின் ஆட்­சியும் இவர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­து­விட்­ட­தா­கவே தோன்­று­கி­றது. சட்­டத்தின் ஆட்­சிதான் நடக்­கி­றதா என்று வியப்­ப­டைய வேண்­டிய நிலையில் அர­சாங்கம் கைய­று­நி­லையில் இருக்க, அர­சியல் தலை­வர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு கிடக்­கி­றார்கள்.

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டில் 18 ஆண்­டுகள் சிறைப் படுத்­தப்­பட்­டி­ருந்த ஒரு பிக்கு, ஜனா­தி­ப­தியின் எதேச்­சா­தி­கா­ரத்தைக் கொண்டு மன்­னிப்­ப­ளித்து, விடு­விக்­கப்­பட்­டுள்ளார். குற்­ற­வா­ளி­களை சிறைப்­ப­டுத்தி வைப்­பதன் நோக்­கங்­களுள் ஒன்று, குற்­ற­வா­ளி­களைச் சமூ­கத்­தி­லி­ருந்து தனி­யாக்கி, பிரித்­து­வைப்­ப­த­னூ­டாக, அக்­குற்­ற­வா­ளி­களின் செயற்­பா­டு­களால் கொஞ்ச காலத்­திற்­கேனும் சமூகம் பாதிக்­கப்­படக் கூடாது என்­ப­தாகும்.

இந்த அடிப்­ப­டை­யைக்­கூடக் கவ­னத்திற் கொள்­ளாமல் ஜனா­தி­பதி சிறி­சேன, அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சட்ட, தர்ம நிய­மங்­க­ளை­யெல்லாம் துச்­ச­மாகப் புறந்­தள்ளி, இவ்­வாறு மன்­னிப்­ப­ளித்­தி­ருப்­பதன் மூல­மாக, போத்­தலின் மூடியைத் திறந்து பூதத்தை வெளியே திறந்து விட்­டுள்ளார். அந்தப் பூதமோ உச்­ச­கட்டப் பேயாட்­டத்தில் இறங்கி, சட்­டத்­தையும் சட்ட ஆட்­சி­யையும் சட்­டத்தின் காவ­லர்­க­ளையும் ஆட்­சி­யா­ள­ரையும் சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் நாசப்படுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

இந்தப் பேர­ழி­வுக்­கான பொறுப்பை நேர­டி­யாக ஜனா­தி­பதி பொறுப்­பேற்க வேண்­டாமா? ஆகக்­கு­றைந்த பட்சம், இத்­த­கைய காடை­யர்­களைக் கட்­டுப்­ப­டுத்தத் தன் நேரடிக் கட்­டுப்­பாட்டில் உள்ள சட்ட, ஒழுங்கு அமைச்சின் அதி­கா­ரங்­க­ளை­யா­வது பயன்­ப­டுத்தக் கூடாதா?

இவ்­வாறு எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டா­ம­லி­ருப்­பது, ஜனா­தி­ப­திக்கும் இந்தக் காவிக் காடை­யர்­க­ளுக்கும் இடையே உள்ள மறை­மு­க­மான இணக்­கப்­பா­டுகள், ஒத்­து­ழைப்­புகள் கார­ண­மா­கவா?

குரு­நாகல் வைத்­தியர் ஒருவர் குறித்து திவ­யின பத்­தி­ரிகை வெளி­யிட்ட போலி­யான செய்­தியால் நாட்டில் ஏற்­பட்­டுள்ள கல­வரச் சூழ்­நிலை இன்­று­வரை தொடர்­வ­தோடு மேலும் மேலும் அதைத் தீவி­ரப்­ப­டுத்தும் தீவிர முயற்­சியில் காவி­த­ரித்த இன்­னொ­ருவர் முழு­மூச்­சாக ஈடு­பட்டு வரு­கிறார். இவர், நீதி­மன்ற வளா­கத்­துக்கு வெளியே நின்­று­கொண்டு ஆக்­ரோ­ஷ­மாகக் கத்­து­கிறார், கோபத்தில் வெடித்துச் சத்­த­மிட்டு, குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­களை, சட்­டமா அதிபர் திணைக்­கள அலு­வ­லர்­களை, பொலிஸ் அதி­கா­ரி­களை எல்லாம் கண்­ட­படி விமர்­சிக்­கிறார், திட்­டு­கிறார், எச்­ச­ரிக்­கிறார், அச்­சு­றுத்­து­கிறார்! இவரின் நடத்­தை­யா­னது ‘பஜார் எக்கே சண்­டியா’ தெருச் சண்­டியன் போலவே உள்­ளது.

இதி­லுள்ள பேரா­பத்து என்­ன­வென்றால் – இவ­ரது இச்­செ­யற்­பா­டுகள் மிகத்­தெ­ளி­வாக, நேர­டி­யா­கவே நீதி­மு­றைமைச் செயற்­பாட்டின் சுயா­தீ­னத்தை, சுதந்­தி­ரதை அச்­சு­றுத்­து­வ­தாகும்! தினமும் இது நடந்து வரு­கி­றது. சாட்­சி­யா­ளர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டும்­போது, விசா­ரணை அதி­கா­ரிகள் மீது எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டும்­போது நீதி எவ்­வாறு நிலை­நாட்­டப்­பட முடியும்?

தான் சொல்­வதே உண்மை, தான் சொல்­வது போலவே நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும், இதற்­கப்பால் எது­வு­மில்லை என்று சொல்­வதைப் போலவே இந்த நப­ரு­டைய தீவி­ர­வாதச் செயல்கள் காணப்­ப­டு­கின்­றன!

பார்த்த பார்­வை­யி­லேயே பொய்­யெனத் தோன்றும் திவ­யின வெளி­யிட்ட குறித்த செய்­தியால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது டாக்டர் ஷாபி மட்­டு­மல்ல! இந்­நாட்டில் வாழும் நீதியை நேசிக்கும் சட்­டத்தை மதிக்கும் சட்ட ஆட்­சியை அவாவும் இனச் சுமு­கத்தை ஆரா­திக்கும் ஒவ்­வொரு பிர­ஜையும் இப்­பொய்­யான செய்­தியால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கும் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும். இவ்­வா­றாக நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டு­மானால் காவிக் காடை­யர்கள் சொல்லும் வித­மாக, விரும்பும் படி­யாக மட்டும் சட்டம் செயற்­படக் கூடாது. அவர்கள் சொல்­வதை மட்­டுமே கேட்­டுக்­கொண்டு அவர்­க­ளுக்குத் தேவை­யான தீர்ப்பை நீதி­மன்றம் கொடுத்­து­விடக் கூடாது. விஞ்­ஞான ரீதி­யான, சட்­டப்­ப­டி­யான விசா­ர­ணைகள், பக்­க­சார்­பற்ற ஆய்­வு­களின் பின்­னரே விட­யங்கள் தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும்! எனவே சட்­டப்­ப­டி­யான, விஞ்­ஞா­ன­பூர்­வ­மான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்கப் படு­வதைத் தடுப்­ப­தற்கோ இடை­யூறு செய்­வ­தற்கோ எவ­ருக்கும் அதி­காரம் இருக்கக் கூடாது. அவ்­வாறு தலை­யீடு செய்வோர், தடுப்போர் யாராக இருந்­தாலும் அவர் இந்­நாட்டின் மொத்தச் சட்­டத்­துக்கும் சட்­டத்தின் ஆட்­சிக்­குமே எதி­ராகச் செயற்­ப­டு­கிறார். இக் காவிக்­கா­ரரும் இவ்­வா­றான வேலை­க­ளையே செய்து கொண்­டி­ருக்­கிறார். நீதி­யான, நியா­ய­மான எல்லா விசா­ர­ணை­க­ளிலும் தலை­யி­டு­கிறார். தன்­னு­டைய எதிர்­பார்ப்பு நிறை­வேறும் வரை­யிலும் பைத்­தியம் பிடித்­தவர் போலவே செயற்­ப­டு­கிறார்.

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­திற்கோ பிர­த­மரின் வாசஸ்­த­லத்­திற்கோ முறை­யான முன்­ன­னு­மதி இன்றி எவ­ரா­வது நினைத்த நேரத்தில் அத்­து­மீறி உள்ளே நுழை­ய­லாமா? எவ­ரா­வது சாதா­ரண ஒரு பொது­மகன் அவ்­வாறு செய்தால் அவர் மீது சட்டம் எப்­படிப் பாயும்? எனினும் காடையர் போலச் செயற்­படும் காவி­தா­ரிகள் தம்­மிஷ்­டப்­படி எல்லா விட­யங்­க­ளையும் செய்­வது எப்­படி? காவி­தா­ரி­க­ளுக்கு எதி­ராக இந்­நாட்டுச் சட்­டங்கள் செயற்­ப­டா­தி­ருப்­பது எப்­படி? ஏன்?

அவர்­களின் அத்­து­மீ­றல்­களை உட­னுக்­குடன் அவ்­வப்­போது எதிர்­கொள்ள முடி­யாமற் போனாலும் பின்­ன­ரா­வது அதற்­காக உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்க முடி­யாதா? சட்­டத்தை மீறிச் செயற்­ப­டு­வ­தற்­கான அனு­ம­தியை காவிக்­கா­ரர்­க­ளுக்கு வழங்­கி­யது யார்?

இத்­த­கைய காவிக் காடை­யர்கள் இவ்­வா­றெல்லாம் செய்­வ­தற்கு வச­தி­யாக இருப்­பது அவர்கள் இன்­னமும் ‘சிவுர’ காவியில் இருப்­ப­தாகும். நாட்­டிலும் சமூ­கத்­திலும் சிவு­ர­வுக்கு இருக்கும் மதிப்­பையும் அங்­கீ­கா­ரத்­தையும் இந்தக் காடை­யர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்து களங்­கப்­ப­டுத்­து­கின்­றனர். அவர்கள் காவி­த­ரித்துக் காட்­சி­ய­ளித்­தாலும் உண்­மை­யான புத்­தரின் சிவு­ரவை அவ­மா­னப்­ப­டுத்­துவோர் ஆவர். இத்­த­கைய கொடூ­ரத்­தன்­மை­களை, காடைத்­த­னங்­களை அழித்­தொ­ழிக்­கவே புத்தர் உபன்­யாசம் செய்தார். இத்­த­கைய துர்ச்­செ­யல்­களைக் களையவே புத்தரின் பின்னால் ஊரூராகச் சென்று உபன்யாசம் பண்ணும் சீடர்கள் அன்று காவி தரித்தனர். இன்று புத்த சாசனத்துக்குள்ளேயே காடையர்களும் சண்டியர்களும் புகுந்திருக்கும் இக்காலத்தில் புத்தசாசனத்திற்கு என்னதான் நடக்காதிருக்கும்?!

(பெளத்த பிக்குகளை – “சீவரதாரீன்” என்று பொதுவாகக் குறிப்பிடுவதில்லை. அவ்வாறு குறிப்பிடப்படும் ஒருசில பிக்குகளின் சில செயற்பாடுகள் புத்த தர்மத்துக்குப் பொருத்தமானவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கிலேயே சிங்களவர் மத்தியில் இப்பிரயோகம் உள்ளது. நாம் இந்தச் “சீவரதாரி – காவிதரித்திருப்போர்” எனும் பிரயோகத்தைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.)

2019.07.21 ‘அணித்தா’ இதழின் ஆசி­ரியர் தலை­யங்கம். தமிழில்: அஜாஸ் முஹம்மத்

3 comments:

  1. சிறையில் அடைத்து வைக்கபட்டறிந்த காவி கைதியை விடுதலை செயும்படி வக்காலத்து வாங்கிய இரு முஸ்லீம் சமூகத் துரோகிகள் ஆன அசாத்தும் ஹிஸ்புல்லாவும் அரசியலில் இருந்து ஒதுக்கப்படவேண்ஸ்ட்டும்.

    ReplyDelete
  2. உங்கள் கட்டுரை உண்மை,ஆனால் இந்த எமக்கெதிரான இனவாததுக்கு நீர் ஊத்தி வளர்த்தது மஹிந்த ஆட்சிதான்.ஆனால் பயிர் நட்டது ரனில் ஆட்சி இப்போதல்ல 2002 ஆண்டில் ஹெல உருமயவும்,திரு.சம்பிக்கவும் ரனிலால் போசிக்கப்பட்டும்,அவர்கள் பகிரங்கமாக வெளியிட்ட புத்தகம்,கருத்துக்கள்தான்,பிற்காலத்தில் இப்போது உள்ள இனவாத கும்பல்கள் தோற்றம் பெறவும்,மஹிந்த ஆட்சி அவர்களை வளர்க்கவும் காரணமாயின.

    ReplyDelete
  3. I agreed your comments Shihabdeen.

    ReplyDelete

Powered by Blogger.