ஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந்தமாக திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு மேற்கொள்ள முயற்சித்த போதும் அதனை காதி நீதிபதி தடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் மகள் மேற்கொண்ட தாக்குதலால் கண்டி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைப்பெற வந்திருந்தார்.
இதன்போது மருத்துவர்கள் அவரிடம் வினவிய போது, 16 வயதான தனது மகள் கர்ப்பிணியாகவுள்ளதோடு, அவரின் கணவர் அவரை கைவிட்டு சென்றுள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மருத்துவமனை அதிகாரிகள் அவரின் மகளை அழைத்து விசாரித்த போது, தாம் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனை அந்த இளைஞர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோர், அக்குரணை காதி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர், குறித்த இளைஞருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் படி கோரிக்கை விடுத்து.
எனினும் காதி நீதிபதி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி சிறுமியை அந்த இளைஞக்கே திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த திருமணத்தை விவாகரத்து செய்வதற்கு குறித்த சிறுமி விருப்பத்துடன் இருந்த போதும், காதி நீதிபதி அதற்கு அனுமதி வழங்கவில்லை என மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிரு (Hiru) சொன்ன அந்த செய்தி அப்டியே போர்ரது தான் ஜப்னா 'முஸ்லிம்'' என்ற பெயரில் இயங்கும் செய்தி நிறுவனத்தின் வேலையா? உண்மையாக சில தினங்களாக காணாமல் பொயுள்ள ஒர் நபருக்கு விவாகரத்து வழங்க முடியுமா அதாவது பெண்ணின் விருப்பமானாலும் பசக் செய்வதற்கு உரிய காலம் வழங்கப்பட வேண்டுமல்லவா? இந்த பெண் தனது தாயைத் தாக்கியுள்ளார் அவரின் அமநிலையையும் கரத்தில் கொள்ள வேண்டுமல்லவா? மற்றையது அந்த நபர் வீடியோ எடுத்ததாகவும் திருமணத்திற்கு முன்னரே கற்பழிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது எனவே இவைகளைக் கருத்தில் கொண்டே காதி இந்த வழக்கை சற்று தாமதித்திருப்பார் என்பது புலநாகிறது
ReplyDeleteகட்டாயம் இந்த விடயம் உண்மையா அல்லது பணம் கொடுக்கப்பட்டு சோடிக்கப்பட்டதா என விசாரிக்க வேண்டும்.அதே வேளை இது Muslim களிடம் மட்டுமே இப்படியான விடயம் இல்லை.எல்லா சமூகத்திலும்,இனங்களிலும் உள்ளது.சொந்த தந்தையும்,அண்ணனும் பாலியல் உறவு வைத்துக்கொள்வது மிகக் கூடுதலாக உள்ளது பிற இனங்களில்.ஆனால் அரிய சில சம்பவங்கலினை பணம் கொடுத்து இனவாத ஊடகங்கள் கொக்கரிக்கின்ரன.ஆனாலும் இவ் விடயம் உண்மை என நிருபிக்கப்பட்டால் கட்டாயம் அந்த காதி நீதிபதிக்கும்,அந்த இலைஞ்ஞனுக்கும் கட்டாயம் தண்டணை வழங்க வேண்டும்.அதே பெண்களின் பெற்றோர் கட்டாயம் பெண் பிள்ளைக்கு கல்வியை வழங்குங்கள்.20 வயதுக்கு பிறகு திருமணம் முடித்து கொடுங்கள்.கல்வி பெண்ணுக்கு அவசியம்.இதேவேளை பிற இனங்களில் அதிகமான பெண் பிள்ளைகள் தந்தையாலும்,அண்ணனாலும் பாலியல் கொடுமைகளுக்கு இலக்காவதை இனவாத ஊடகங்கள் வெளியே சொல்லாவிட்டாலும் நீதிமன்ர வழக்குகலினை ஆய்வு செய்தால் Muslim சமூகத்தை விட அடுத்த சமூகத்தில் வீட்டுக்குள்லேயா அதிகம் பாலியல் கொடுமைகள் நடப்பதும் அப்படியான சம்பவங்கள் இலச்சக்கனக்கில் பொலிஸ், நீதிமன்ரில் விசாரனையில் உள்ளதும் அனைவரும் அறிந்த உண்மை.
ReplyDeleteஒரு சமூகக் கட்டமைப்பு என்று வருகின்றபோது அதில் மிக அதிகமான குறைபாடுகளும் எடுக்கப்படும் முடிவுகளிலும் தவறுகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தளவில் இந்த நீதிபதி எடுத்த முடிவு மிகவும் சரியானது. இதன் background தெரியாது. எது எப்படியிருந்தபோதும் எமது சமூகத் தலைமைகள் தமது சமூக அமைப்பில் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். தலைவர்களைக்கூட மேற்பார்வை செய்ய குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். தலைவரே எம்மால் தெரிவு செய்யப்படுவர்தான். முதலில் இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு என்பது தனித்துவமிக்கது என்பதனை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். எங்களது சகல அசைவுகளும் குர்ஆன் சுன்னாவின்படி வரையரை செய்யப்பட வேண்டியதாகும்.
ReplyDeleteஅழுக்கெல்லாம் அடுத்த இனத்தில்தான் என்று Rizard போன்றவர்கள் பேசும் இனவாதம் ஆபத்தானது. Rizard குறிப்பிடும் பால் உறவு தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் இல்லாத நல்லது கெட்டது எதுவும் பிற இனங்களிடமும் இல்லை என்பதை Rizard அவர்களுக்கு ஒரு ஆய்வாளனாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். காதிகோட்டை கண்காணிப்பது தொடர்பாக முஸ்லிம்களுக்கு விசேட பொறுப்பு உண்டு. ஏனெனில் தமிழரதும் சிங்களவரதும் தனிச்சட்டங்களான தேசவளமையும் கண்டிய சட்டங்களையும் அரசு தடை செய்துவிட்டது. தனிச்சட்ட சலுகை எஞ்சி இருப்பது முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று சிங்களவ இனவாத ஆர்வலர்கள் நெடுங்காலமாக உரத்துச் சொல்லி வருகிறார்கள். இன்று அந்த எதிர்ப்பு போராட்ட மட்டத்தை எட்டி விட்டது. ஏனைய மூன்று இனங்கள் மத்தியிலும் நிலவும் தனிச்சட்டத்துக்கு எதிரான மனநிலை ஏனைய பெண்கள் சம்பந்தபட்ட மதமாற்ற திருமணம் மணமுறிவு ஜீவனாம்சம் தொடர்பாக தனிச்சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதுதான். சிங்களவர் மத்தியிலும் கிழக்கு மாகாணத் தமிழர் மத்திலும் பெண்கள் மதமாற்றம்தான் எரியும் அடுத்தகட்ட இனமுறுகல் மோதல் பிரச்சினையாக வளர்ந்துவருகிறது. மதமாற்ற திருமணங்களையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு முழுமுஸ்லிம் மக்களுக்கும் உரியதாகும்.
ReplyDelete@Jeyabalan Sir; Actually Sri Lankan Muslim inhabitants are the mixed group of Sinhala and Tamil dynasties of Sri Lanka which you know very well as a historical researcher of the land. If Male Muslims are marrying girls from other sect, it means they are marrying their relatives. To my knowledge, there are no compulsion in such marriages. Hope you understand and excuse me if I give you bad impression.
ReplyDeleteபெண்களின் திருமண வயது மாற்றி அம்மைக்கப் படவேணும் . மாற்று கருத்துக்கு இங்கு இடமில்லை.
ReplyDelete