பௌத்த விகாரைகளுக்குள் நடக்கும் பாலியல், துஷ்பிரயோக, கொடுமைகள் சாதாரணமான விடயம்
இலங்கையில் உயர் பீட பௌத்த துறவிகளால் ஆரம்ப நிலையிலுள்ள சிறுவர் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.
10 வயதிற்குட்பட்ட பிக்குகள் சிலர் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய நிலையில், அவர்களது பெற்றோர்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவ்வாறு சிறிய பிக்குகள் பலர் மூத்த பௌத்த துறவிகளால் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய பிக்குகள் சாப்பிட்ட பின்னர் வீசுவதற்காக தட்டில் மீதம் வைப்பதே சிறிய பிக்குகள் சாப்பிட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தனது மகன் பிக்குவாக சிறுவயது முதல் விரும்பியதாகவும், அதற்கமைய தாம் அவரை பிக்குவாக்கியதாகவும் தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனது மகன் பல்வேறு முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாகவும், அதனால் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று தற்போது அமைச்சரிடம் அழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் கொடுமையான காரியங்களில் பெரிய பிக்குகள் ஈடுபடுவதாகவும், அதனை கூறுவதற்கு வெட்கமாக உள்ளதென குறிப்பிட்டுள்ளர்.
இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய பெரிய பிக்குகளிடம் முறைப்பாடு செய்தால்், விகாரைகளில் இவைகள் சாதாரணமான விடயம் என கூறுவதாகவும், பாதிக்கப்பட்ட சிறிய பிக்குவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
தமது முறைப்பாடுகளை யாரும் நம்புவதில்லை என்பதனாலேயே தற்போது மருத்துவ ஆதாரம் உட்பட பல ஆதாரங்களை எடுத்து வந்ததாக சிறிய பிக்குவின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதனை கண்டி அஸ்கிரிய பீடத்திற்கும், கிறிஸ்தவ பேராயர் மெல்கம் ரஞ்சித்திடமும், முஸ்லிம் பெரியவர்களிடமும் கொண்டு செல்வதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.
தான் பௌத்த மதத்தை அசிங்கப்படுத்த நினைக்கவில்லை எனவும், நியாயம் பெற்றுக் கொடுக்கவே எண்ணுவதாகவும், ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உண்மைகள் சாட்சிகலுடன் இருக்க இன்னும் அந்த காமுகர்கலுக்கு எதிராக எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? Muslim ஒருவன் மீது எந்த வித ஆதாரமும் இல்லாமல் சந்தேகத்தில் எனும் போர்வயில் இனவாதிகலின் அழுத்தம் காரணமாக கைது செய்ய முடியும் எனில்,ஆதாரம் இருந்தும் இன்னும் ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ReplyDeleteவாள் இருக்குதென பொய் கூறி பள்ளிகலுக்குல் நுழைந்து நடவடிக்கை.ஆனால் மிகவும் அருவருக்கத்தக்க பாலியல் வெறியாட்டம் நடந்துள்ளது,ஆதாரம் பலமாக உள்ளது ஆனால் எந்த வித விசாரனை,நீதி இல்லை
ReplyDelete