"சந்தேகத்திலிருந்து சிங்கள, மக்கள் மீள வேண்டும்"
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன. செனட் சபை என்றும் மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமுகத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலமைப்பில் ஏக்கிய ராஜ்ஜி என்ற சொல்லை சிங்கள மக்கள் தவறாக அர்த்தம் கொண்டிருக்கின்றனர். ஏக்கிய என்பது ஒருமித்த நாடு என்ற அர்த்தமாகும். அதில் எந்த பிளவும் இல்லை. அதனால் புதிய அரசியலமைப்பினூடாக நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடவேண்டும்.
அத்துடன் புதிய அரசியலமைப்பினூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டும். அதேபோன்று தேர்தல் முறைமையில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்ற முறையில் அடுத்த வரவு செலவு திட்டத்தை வெற்றிகொள்ள முடியாத நிலை பல தவிசாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கும் இன்று பிரச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் பழைய முறையிலாவது மாகாணசபை தேர்தலை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடத்தவேண்டும் என்றார்.
புதிய அரசியலமைப்பினூடாக முஸ்லிம்கள் அடிமையாக்கப்படுவார்கள் என்கிற கவலை இந்த நயவஞ்சகனுக்கு என்றுமே ஏற்படாது. டயஸ்போரா போடும் எச்சை எலும்புகளுக்கு இந்தளவு அவர்களிடம் சுருண்டுள்ளது வெட்கக்கேடானது
ReplyDeleteDear Rauff you have to be smart to get the things done for our community, If you cannot do the job, go home, do for major Sinhalese parities.
ReplyDeleteYour fancy approach with double game so far miserably failed.
R.HAKIM.U ARE THE MAIN MAN TO
ReplyDeleteCREATE EVERY PROBLEM FOR
MUSLIMS.ALL THE DMAGES HAPPENED
TO MUSLIMS, BECAUSE OF U.
DO U THINK
U ARE THE LEADER OF MUSLIMS.NO N0 N0.!!!
DO NOT FOOL US .
I THINK U KNOW VERYWELL
THE SIGNES OF A MUNAFIQ.
AND
WHO IS A MUNAAFIQ.
I APPRECIATE MR, NAKEEBS & NGK'
ReplyDeleteCOMMENTS. KEEP IT UP. MUSLIMGALAI
EIMAATRUHINRAVAN.
நன்றி தோழரே, தமிழர்களின் போராட்டத்தின் தொடற்சியாக இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்க்கு நாடுகளின் அழுத்தம் என்பவை தொடர்பாக 1987ல் மாகாணசபையுடன் ஆரம்பித்தது. இந்தியா புலிகள் மோதலால் தடைபட்ட போதும் மீண்டும் வெளி அழுத்தங்கள் அதிகார பகிர்வு சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரபகிர்வை முழுமையாக அனுபவிப்பது தொடர்பாக தேர்தல் முறைமை முக்கியமாகும். தமிழ்பேசும் இனங்கள் குறிப்பாக முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் பிரதி நிதித்துவத்தை தக்கவைப்பதும் உச்சப்படுத்துவதும் போன்ற ஒத்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிஸ்ட்ட வசமாக நீங்களும் நண்பர் மனோகணேசனும் இப்பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே செயல்படுகிறீர்கள். உண்மையில் அதிகாரப்பரவலாக்கலின் உச்ச பாதுகாப்பையும் பலன்களையும் தமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழர் ஐக்கியப்பட்டால் மட்டுமே முழுமையாக அனுபவிக்க முடியும். தோழரே உங்களுக்கும் சம்பந்தர் ஐயாவுக்கும் தோழர் மனோகணேசனுக்கும் உள்ள புரிந்துணர்வு மேலும் பலம்பெறவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete