Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நியமிக்கப்பட்டால், வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் - திகாம்பரம்

எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியை விட்டு விலகவோ வேறும் ஓர் கூட்டணியில் இணைந்து கொள்வதோ பற்றி சிந்திக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியே தீர்மானிக்க வேண்டும் எனவும் சிறு கட்சி என்ற அடிப்படையில் இதில் தீர்மானம் எடுக்க தங்களுக்கு முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளாது அனைவரும் இணைந்து செயற்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றியீட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.