முஸ்லிம் அரசியல்வாதிகள், செய்த நல்லகாரியம்...!
முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்த நல்லகாரியம் . கச்சிதமாக காரியமாற்றிய இணையம்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையிடும் மனித உரிமை செயற்பாட்டாளர் Clément Nyaletsossi Voule தலைமையிலான குழுவினர் இன்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலுள்ள மு.கா. கட்சி காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, றிஷாத் பதியுதீன், எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், அலிஸாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், ஏ.எல்.எம். நசீர், அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் 2020 ஜூன் மாதம் மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது அமர்வின்போது தனது இலங்கை வருகை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பார்.
Clément Nyaletsossi Voule இலங்கை வரும் செய்தியையும், இதனை முஸ்லிம் தரப்பு தக்கமுறையில் பயன்படுத்த வேண்டுமெனவும் jaffna muslim இணையம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் தனிப்பட்ட ரீதியில் முஸ்லிம் அரசியல் வாதிகளை தொடர்பு கொண்டு ஐ.நா. அறிக்கையாளரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு இணையம் வலியுறுத்தியிருந்தமையையும் இங்கு மேலதிகத் தகவலாக பகிர்ந்து கொள்கிறோம்
When they do some good you must tell that public as well. It is good, they are human beings too, they too need some encouragement and moral boasting. they too need some reward when they do good. but, some misuse this post that is bad side of it.. now, all resign with expectation in coming election.. good thing they have done it..they must have done in 2011...as and when initial problem started in Dambullah mosque.
ReplyDeleteVery good and very intelligent
ReplyDeleteMasha Allah.. thanks to JM this also responsible for our community what you did.No need to be politician to serve the people. need a honest,dedication,hard work specially must be a patriot.
ReplyDelete