Header Ads



ஐ.தே.க.க்கு முஸ்லிம்கள் இம்முறை பாடம் கற்பிப்பார்கள் - பொதுஜன பெரமுன

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே கொழும்பு நகரில் வாழும் மக்களுக்கு புதிய உயிர்ப்பை பெற்றுக்கொடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட முஸ்லிம் அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -23- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் என அனைவரும் முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

கொழும்பில் வாழும் மக்களுக்கு தற்போது வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் இந்த நிலைமையை அன்று மாற்றி கொழும்பில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தனர்.

முஸ்லிம் மக்கள் தற்போது அதனை உணர்ந்துள்ளனர். கொழும்பில் உள்ள முஸ்லிம் மக்கள் தெளிவாக இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடகத்தை கற்பிப்பார்கள் எனவும் உவைஸ் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.