ஜனாதிபதி மைத்திரியை கைவிட்டு, ஓடத்தொடங்கியுள்ள கட்சிகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகள் தற்பொழுது அவரை விட்டு விலகிச் செல்வதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியும், கட்டாருக்கான முன்னாள் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகியன மட்டுமே ஜனாதிபதியுடன் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் இணைந்திருந்த 17 அரசியல் கட்சிகளில் தற்பொழுது இரண்டு கட்சிகள் மட்டுமே இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியும் அண்மையில் ஜனாதிபதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விலகிச் சென்ற அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் இணைந்து கொண்டு எதிர்கால தேர்தல்களுக்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment