Header Ads



ரணிலின் நரித் தந்திரம் இதுதானா..?

அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் ஆகஸ்ட் 5 நடைப்பெறப்போகிறது. இதிலே ஜனாதிபதி வேற்பாளர் யார் என்பதை தெரிவு செய்யமாட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சி சொல்லி இருக்கிறது. ஜனாதிபதி வேற்பாளராக தெரிவு செய்பவரே அந்த புதிய (கூட்டிணைந்த) கட்சியின் தலைவராக இருப்பார் என சொல்லப்படுகிறது.

அப்படி என்றால் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்காது என்பது தெளிவாகிறது, அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து புதிய கூட்டமைப்பாக களமிறங்கும் கட்சியின் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் இருப்பார் என்பதும் தெளிவாகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு பிரகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக்கினால் அவரே அந்த கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த அடிபப்டையில் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேற்பாளர் வெற்றி பெற்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருக்கத்தேவை கிடையாது காரணம் அவர் புதிய கட்சியின் தலைவராகவே தேர்தலில் களமிறங்கு வெற்றிபெற்றுள்ளார் என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

ஆகவே சுருக்கம் : ரணில் விக்ரமசிங்க அவர்கள் யார் ஜனதிபதியாக வந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருந்துகொண்டு பிரதமராவதற்கான முன்னெடுப்புகளை செய்வார். 

sham Marikar

No comments

Powered by Blogger.