Header Ads



முஸ்லிம் சமூ­கத்­துடன், கலந்­து­ரை­யாடத் தயார் - சம்பிக்க தெரிவிப்பு


முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு கலந்­து­ரை­யா­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்­ப­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் சிவில் சமூ­கத்­தூ­துக்­குழு ஒன்று அண்­மையில் ஜாதிக ஹெல உறு­ம­ய­வியன் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவை அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து நாட்டின் தற்­போ­தைய நெருக்­கடி நிலை குறித்து கலந்­து­ரை­யா­டி­யது. நீதிக்கும் நியா­யத்­துக்­கு­மான அமைப்பின் அங்­கத்­த­வரும் மாலை­தீவின் முன்னாள் இலங்கை தொழிற்­றுறை அதி­கா­ரி­யு­மான எம்.கே.எம்.நௌபரின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் தேசிய பாது­காப்பு ஆணைக்­கு­ழுவின் அங்­கத்­தவர் சட்­டத்­த­ரணி ஜாவித் யூசுப், ஹிழ்ரு சித்திக், சட்­டத்­த­ரணி ரிசாம் தஹ்லான் மன்சூர், ஸ்ரீலங்கா டெலிகொம் ஓய்­வு­பெற்ற சந்­தைப்­ப­டுத்தல் முகா­மை­யாளர் எம்.எஸ்.எம். முஸம்மில், டாக்டர் ரியாஸ் காசிம் ஆகி­யோ­ருடன் அமைச்­சரின் இணைப்­பா­ளரும் கோட்டே மாந­கர சபை உறுப்­பி­னரும் கலந்­து­கொண்­டனர்.

இச்­சந்­திப்பில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்கள் மற்றும் இஸ்லாம் தொடர்­பாக எழுப்­பப்­படும் சந்­தே­கங்கள் பற்றி தூதுக்­கு­ழு­வினர் விளக்­கினர். இது­போன்ற கலந்­து­ரை­யா­டல்­களை எதிர்காலத்தில் தொடருவதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக கூட்ட ஏற்பாட்டாளர் எம்.கே.எம். நௌபர் தெரிவித்தார்.

vidivelli 

3 comments:

  1. இவர் என்ன ஜனாதிபதியா பிரதமரா ஒருபிரயோசனமும் இல்லாத இனவாதி அத்துரலிய ஞானசார போன்றவர்களுடன் தான் இவன் வைக்கனும் முக்கியம் கொடுத்து பேசவே கூடாது.

    ReplyDelete
  2. திரு.சம்பிக்க அவர்கள் தெளிவு பெற்றால் போதும் சிங்கள மக்கள் அனைவரும் தெளிவு பெற்ரது போலாகிவிடும்.எனவே திரு.சம்பிக்க அவர்களே இன்னும் இன்னும் கலந்துரையாடுங்கல் தெளிவு பெறுங்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தின் பிதாமகர் என்ற பெருமை இவரையே சாரும். இவருடைய தத்துவம் தான் மூலை முடுக்குகளெங்கும் வேலை செய்கின்றது. வெளிரங்கத்தில் நல்லவராக நடித்தாலும் உள்ளத்திலுள்ள விஷமும், வஞ்சனையும் அழியாது. எம்மை இம்சைப்படுத்தும் மோசமான-உண்மையற்ற கண்டுபிடிப்புக்களின் தாயகமும் துவேஷத் தரப்படுத்தலில் முதலாமவரும் இவரே.

    ReplyDelete

Powered by Blogger.