முஸ்லீம் பயங்கரவாதிகளை, காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறது - இன்பராசா
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்போது பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை குலைத்து தமிழரை நோக்கி திசை திருப்புவது இந்த இனவாதக் கட்சிகளின் நோக்கமாகும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இன்று -24- வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் அதற்கு காரணமானவர்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசியல் காரணங்களுக்காக சில குழுக்கள் இனக்கலவரம் ஒன்றை கிழக்கில் ஏற்படுத்த முயல்வதாக எமக்கு தோன்றுகிறது. இக்கலவரத்தை ஏற்படுத்தி சிங்கள தமிழ் இனங்களிடையே பிளவை தொடர்ந்து பேணுவதும் எதிர்வரும் தேர்தல்களில் அதன் மூலமாக வாக்குகளை சேகரிப்பதும், அதேவேளையில் இந்த நாட்டில் இந்த இடத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய பிரதானிகளைப் பார்த்தால் அரச தரப்பினரும் அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் இனவாத கட்சியொன்றின் செயற்பாட்டாளர்களும் என்பதை அவதானிக்கலாம்.
இவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு சட்ட நீதி வழிமுறைகளை நாடாமல் வீதியில் இறங்கி கோஷமிடுவதனால் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை துரத்திவிடலாம் என்று தமிழ் மக்களுக்கு கடந்த எழுபது வருடங்களாக வழிகாட்டி வருபவர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கடந்த பத்து வருடங்களாக கிழக்கில் நிலவி வந்த அமைதி நல்லிணக்கம் என்பனவற்றை தேர்தலுக்காக பலி கொடுக்க முனைகின்றனர்.
தமிழ் சிங்கள மக்களிடையே கடந்த நான்கு வருட காலத்திற்குள் நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய பல மரபுரிமை, காணி பிரச்சினைகளுக்கு இன்று வரை தீர்வு காணாமல் பிரச்சினைகளை ஆறாத ரணங்களாக நீறு பூத்த நெருப்பாக வைத்துக்கொண்டிருந்தது.
தேர்தல்கள் வரும் போது இரண்டு புறமும் கைக்கூலிகளை வைத்து அப்பாவி தமிழ் சிங்கள மக்களை மோத வைத்து அவர்களின் கண்ணீரிலும், செந்நீரிலும் பிணத்திலும், வேதனை நெருப்பிலும் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து நாடாளுமன்ற கதிரை சுகம் அனுபவித்து வரும் படித்த சட்டத்தரணிகளான தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர்வைப் பெற வழிவகை கூறவில்லை என்பதை தமிழ் மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.
சட்ட ரீதியாக பிரச்சினையை தீர்க்க விரும்பாமல் அவர்களும் அவர்களது நண்பர்களான அரச தரப்பும் இனக்கலவரத்தை மூட்டி அரசியல் செய்ய விரும்புகின்றனர்.
அதேவேளையில் தமது நட்புக்களான முஸ்லீம் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப்படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வேறு திசைக்குதிருப்பி பயங்கரவாதிகளை காப்பாற்ற முனைகின்றனர்.
எனவே தமிழ் மக்கள் இப்படியான மத ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்குசட்டரீதியாகவே தீர்வு காணவேண்டுமேயல்லாமல்ஆர்ப்பாட்டம் செய்வதனால் கவுரவ ரணில் விக்கிரமசிங்க அரசை அடிபணிய வைக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை அரசின் தொல்பொருட் திணைக்களத்தின் நடவடிக்கைகளே இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் என்பதைக் காணலாம்.
இந்த அரசையும், ஐ.நா. அமைப்புக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் உடனடியாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளையும், பிரதேச செயலக அதிகாரிகளையும், ஆளுநர் செயலக அதிகாரிகளையும் இப்படியான இனமுறுகல் ஏற்படுவதற்கு காரணமாக கடமையில் உதாசீனமாக இருந்தமைக்கு கைது செய்து சதித்திட்டம் ஊழல் ஏதும் செய்துள்ளனரா என விசாரிக்க வேண்டும்.
மத அடிப்படையில் நில ஆக்கிரமிப்பு மேலாண்மை தனி நபர் ஆதாயம் உருவாக்குவதற்கோ அல்லது தென்பகுதி சுற்றுலா வியாபாரிகள் கிழக்கிலங்கை சுற்றுலா தலங்கள் விருத்தியடையாமல் தடுப்பதற்கோ யாருக்காவது நிதிகளை வழங்கினார்களா என சம்பந்தப்பட்ட தரப்புகளை விசாரித்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், இவ்வறிக்கையானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
😂🤣😂🤣 haha munnal payangavathi ithai pesuthu ????
ReplyDelete�������� haha munnal payangavathi ithai pesuthu ????
ReplyDelete�������� haha munnal payangavathi ithai pesuthu ????
ReplyDelete