சஜித் இல்லை என்றால், விலகி சென்று விடுவோம் - வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்போம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றால், தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக போவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற கடும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அப்படியில்லை என்றால், கட்சியில் இருந்து விலகி விடுவேன்.
எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. சஜித் இல்லை என்றால், நாங்கள் இல்லை. நாங்கள் விலகி சென்று விடுவோம். வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்போம் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
பாஸ் கத்தார் போகலாம் , அங்கே நல்ல வேலை இருக்காம் எண்டு கேள்வி
ReplyDelete