விகாரையை அகற்றி, ஆலயத்தை நிறுவுமாறு பணிப்பதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் - இந்து அமைப்புக்கள் குற்றச்சாட்டு
“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
வழமைபோன்று பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையே ஜனாதிபதி வழங்கியுள்ளார்” என்று இந்து அமைப்புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் 11.30 மணியிலிருந்து 12.30 மணிவரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், ப.திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகர், வேலுகுமார், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கன்னியா பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அவற்றை உடன் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி இதன்போது பணித்துள்ளார்.
இருப்பினும் அந்த விகாரையை அகற்றி மீண்டும் பிள்ளையார் ஆலயத்தை நிறுவுமாறு பணிப்பதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் என்று இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மேலும், முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் முளைத்துள்ள பௌத்த விகாரை எந்தவிதமான புராதான வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை என்று தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் ஜனாதிபதி முன்பாக வெளிப்படுத்திய
பின்னரும், அந்த விகாரையை அகற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தும் இந்து அமைப்புக்கள், ஆகக் குறைந்தது பிள்ளையார் ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்குக் கூட அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்தன.
“சைவ மக்களை இரண்டாவது பிரதான மதமாகக் கொண்ட எமது நாட்டில் மக்கள அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செயல் தற்போது நடைபெற்று வருகின்றது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகள் அறுத்தெடுக்கப்பட்டமை, கன்னியா பிள்ளையார் கோயில் இடிக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகள் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றன.
இந்த அசம்பாவித நடவடிக்கைகளுக்கு நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி பதவியேற்கும்போது நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் சந்தோசமாக வாழ வைப்பது தனது நோக்கம் என்று கூறியிருந்தார்.
வாக்களித்த மக்களுக்கு அவர் தனது கடைமையைச் செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாவில் ஆரம்பத்தில் புத்தர் சிலைகள் ஒன்றும் இருக்கவில்லை. அங்கு இருந்த பிள்ளையார் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் கட்டப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறி இந்த அரசு அமைக்கப்பட்டது. ஆனால், மக்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. கன்னியா விடயத்தையும் அப்படியே விட முடியாது" - என்றார் ஆறுதிருமுருகன்.
இதேவேளை, தென்கயிலை ஆதீனத்தின் இரண்டாவது குருமுதல்வர் தெரிவித்ததாவது,
"கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மீண்டும் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் அங்கு எந்தவொரு மதத் தலமும் அமைக்க இடமளியோம்" - என்றார்.
நேற்றே சொன்னோமே எல்லாம் சும்மா வாக்குறுதி,மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் என.சிரிப்பாக உள்ளது இந்த லச்சனத்தில் சில வயதானவர்கள் சிலருக்கு பல முறை Thanks எல்லாம் சொல்லிவிட்டார்கல் என்ன கொடுமடா.
ReplyDeleteஎனது தகப்பனார் முன்பு என்னிடம் சொன்ன கதை. கன்னியாவுக்கு “புதினம்” பார்க்கத்தான் முன்பு சாரி சாரியாக எல்லா இன மக்களும் செல்வர். முன்புன்னா ஒரு பத்து வருசத்துக்கு முன்னர். அங்கு சுற்று வட்டத்திற்கு – ஐந்து கிலோ மீற்றர் - என்று சொல்லுங்களேன். இந்து மக்களைத் தவிர வேறு எந்தக் குடிமக்களும் வசிக்கவில்லை. அங்கிருந்த இந்துக் கோயிலை அங்கு பூர்வீகமாக வாழ்ந்த இந்து மக்கள் தமது வணக்க வழிபாடுகளுக்காகவும் திருவிழாக்களுக்குமாகப் பயன் படுத்தினர். அப்படியான திருவிழாக்களுக்காக எல்லா இடங்களிலிருந்தும் சகல இன மக்களும் திரளாக வருவர். மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள். (because they distribute கடலை, பாயாசம், வடை அப்படி ரொம்ப items.). முஸ்லிம்களுக்கும் அங்கு ஒரு புராணகால அவுலியா அப்பா அவரகளினால் கட்டுவிக்கப்பட்ட பள்ளிவாயல் இருந்தது. Guest Muslims used this Mosque for theit temporary prayer purpose. இப்ப என்னடான்னா அங்க பௌத்த கோயில் வேணுமின்னு சாமிமார் அடம் பிடிக்கின்றனர். பௌத்த மக்கள் அல்ல. இது இன்றைய 21ம் நூற்றாண்டின் இணையற்ற ஜோக்காகவே கருதப்படுகின்றது. இந்த விடயத்தை என்ட தகப்பனார்கிட்ட சொன்னேன். அவங்க சொன்னாங்க கட்டாயம் அந்த இடத்தில பௌத்த கோயில் இல்ல இல்ல பல கோயில்கள் இருக்கனும். அமைக்கனும்னு. ஏன்னு கேட்டா சொல்றாங்க. இப்ப கன்னியா பகுதியில கிட்டத்தட்ட இருபது கோடி பௌத்த மதத்தைப் பினபற்றும் பூச்சுகளும் புழுக்களும் அங்குள்ள கறையான் புற்றுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவைகள் வணங்குவதற்கு கோயில்கள் தேவையில்லையா? ன்னு. இது புத்தியுள்ளவங்களுக்கு சிந்திக்கிறதுக்கு ஒரு பாடம்.
ReplyDelete