Header Ads



விமானப் கட்டணங்களை, குறைக்குமாறு பிரதமர் பணிப்புரை

விமானக் கட்டணங்களை குறைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வாராந்த அபிவிருத்தி கூட்டம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இவ்வாறு விமானக் கட்டணங்களை குறைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விமான கட்டணத்தை குறைத்தால் மற்றைய விமான சேவைகளும் அதேபோல் கட்டணத்தை குறைக்க வேண்டியிருக்கிறது.

அப்படி செய்வதற்கு நிலத்தில் கையாளும் செலவுகள் டெல்லியில் இருக்கும் அளவிற்கு குறைக்கப்பட வேண்டும்.

அத்துடன் விமான எரிபொருள் கட்டணமும் அடுத்து ஆறு மாதங்களுக்குள் குறைக்கப்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமான நுழைவுச்சீட்டு கட்டணங்களை குறைப்பதற்கும், நிலத்தில் கையாளும் செலவுகள் மற்றும் எரிபொருள் கட்டணங்களை மாற்றியமைக்கவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. YOUR GOVERNMENT INCREASED
    THE EMBARCATION TAX FROM 10 $
    TO 50 $. IN THE LAST BUDGET.
    NOW V ARE PAYING.
    BORU KIYA KIYA BADUGAHILLA
    SEEMAWAK NEHE.
    OKKOMA BORU WAGAI THAMAI ME
    BORUVATH.
    MEKA BORU PAALANAI.
    APITA LEBUNE KOLIPPAAL.
    KOLIPPAL.

    ReplyDelete

Powered by Blogger.