Header Ads



யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய ஸாலிஹா நிஜாம்டீன், மருத்துவ பீடத்திற்கு தெரிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

நிஜாமுடீன் மற்றும் திருமதி. துஜானா ஆகியோரின் மூன்றாவது புதல்வியான செல்வி. ஸாலிஹா நிஜாம்டீன் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்...

இவர் கடந்த வருடம் (2018) உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் இரண்டாம் தடவையாக தோற்றி  A, 2B பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் ஒஸ்மானியா கல்லூரியில் 2014 இல் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றி 5A,2B, 2C பெற்றுள்ளதோடு உயர்தர கல்வியை உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் தொடர்ந்துள்ளார். அத்துடன்,இவர் பாணந்துறை ஜீலான் நவோதய பாடசாலையின் பழைய மாணவியுமாவார்.

இவரது குடும்பம் 2011 ஆம் ஆண்டு யாழில் மீள்குடியேறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

3 comments:

  1. பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும் மகளே. ஸாலிஹா நிஜாம்டீன் அவர்களே. யாழ்பாண மக்களுக்கு குறிப்பாக மிகவும் நெருக்கடிக்குள் வாழும் மீழக்குடியமர்ந்த யாழ் முஸ்லிம் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.நன்றி

    ReplyDelete

Powered by Blogger.