கந்தப்பளையில் விகாரை அமைக்கும், முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு - பௌத்த கொடியும் அகற்றப்பட்டது
நுவரெலிய கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வச் சந்நிதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
கந்தப்பளை கோட்லோஜ் பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலனறுவைப் பகுதியை சேர்ந்த தேரர் ஒரவரினால் இந்தப் பௌத்த கொடி ஏற்றப்பட்டது.
இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இது தொடர்பில் கந்தப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து நுவரெலிய பொலிஸ் நிலைய பொலிஸ் அத்தியட்சகர் ,நுவரெலியா பிரதேச கபைத்தலைவர் வேலு யோகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடியபின் கொடியை அகற்றினர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மனோகணேசன் சம்பவம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள மாடசாமி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
intha ottumai muslim kalidam illaye ??? viharai ya sontha valavila vaithaalum paarthiddu iruppaaga
ReplyDeleteநன்றி மனோ.
ReplyDeleteநாளை மீண்டும் ஜாம் ஜாம் என கொடி வைப்பார்கள் இருந்து பாருங்கள்.
ReplyDeleteமைத்திரி,மஹிந்தவுக்கு அடங்காத பிக்குகள் இவர்களுக்கு அடங்கவா? எல்லாம் சும்மா வார்த்தைகள் மட்டும்
ReplyDelete