Header Ads



முஸ்லிமுக்கு எதிராக எந்த வன்முறையில் ஈடுபடாத, தமிழர்களுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள்..?

சர்வதேசத்தின் அனுசரணையுடனும், ஒத்துழைப்புடனும், நடுநிலையுடனுமான எழுத்து மூலமான ஒரு உத்தரவு தமிழ் மக்களுக்கு கிடைக்குமாக இருந்தால் மாத்திரமே நாங்கள் இன்னுமொரு சிங்களத் தலைவரை நம்பமுடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று -27- நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் மக்களுக்காக முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருந்தோம். காரணம் எங்களுடைய இன உறவு நீடித்து நிலைக்க வேண்டும் என்பதற்காகவே.

கடந்த 70ஆண்டுகளுக்கு மேலாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடிய எமது சமூகம் இன்று இணைந்த வடக்கு கிழக்கை பெற முடியாத நிலை மாத்திரமல்ல ஆகக்குறைந்தது தமிழர்களுக்கு ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்திப் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கும் தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வா அவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது புத்த பிக்குகள் ஊர்வலம் நடத்தி அந்த ஒப்பந்தத்தை நிறைவேறவிடாமல் செய்தனர்.

அன்று அந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இத்தனை அழிவுகளை நாங்கள் சந்தித்திருக்க மாட்டோம்.

இத்தனை அழிவுகளையும் சந்தித்துவிட்டு எதுவுமே கிடைக்காத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் எமக்காக இறந்த அந்த ஆத்மாக்களின் ஆத்மசாந்திக்காகவாவது தமிழர்கள் ஒன்றுபடுகின்றனரா என்றால் இல்லவே இல்லை.

வடக்கு கிழக்கு வேறுவேறு அரசியல் நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும்.

கிழக்கு மாகாண தமிழர்களை அரசியல் ரீதியாக குழப்புவதற்கும், கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதற்கும் சில கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன.

கடந்த மாதம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக தமிழர்கள் பிக்குகளின் உதவியை நாடி உண்ணாவிரதம் இருந்தனர். ஆதற்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரிஸ் பிரபாகரன் காலத்தில் கூட தாங்கள் புத்த பிக்குகளின் உதவியை நாடவில்லை என்று கூறியிருந்தார்.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தபோது கூட தாங்கள் பிக்குகளை நாடவில்லை என்று கூறுகின்றார். நான் அவருக்கு ஒன்று கூற விரும்புகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் பள்ளிவாசல்களிலும் வேறு சில இடங்களிலும் ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றதாக நாங்கள் அறிந்தாலும் அவர்கள் புத்த பிக்குகளை நாடவில்லை மாறாக இலங்கை பாதுகாப்புப் படையை நாடினார்கள்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் மட்டக்களப்பில் 30பேர் சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டனர். பேராயர் ரஞ்சித் வெல்கம் ஆண்டகைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும், அவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்றெல்லாம் கூறுபவர்கள், மட்டக்களப்புத் தமிழ் மக்கள் ஒரு முஸ்லிமிற்கு எதிராகவாவது எந்தவொரு அசம்பாவிதத்திலும் ஈடுபடவில்லை என்பதற்கு மட்டக்களப்புத் தமிழ் மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது. யார் வேட்பாளர் என்று புதிராக இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு சிங்களத் தலைவர்களையும் நம்பக்கூடிய நிலையில், நம்பக்கூடிய மனோநிலையில் நாங்கள் இல்லை. இறுதியாக நாங்கள் நம்பிய தலைவர்தான் மைத்திரிபால சிறிசேன.

தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றோம்.தமிழ் ஈழம் கேட்ட நாங்கள் வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

அந்த நிலையில் நாங்கள் ஒன்றுபடவேண்டும்.கிழக்கு தமிழர்களின் வாக்குகளை பிரித்து கிழக்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் நோக்கத்தினை இங்கு புதிது புதிதாக வந்து அரசியல் செய்ய எத்தனிப்பவர்கள் நிறுத்திக்கொண்டு,கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்துகொண்டு எங்களை கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றுவதங்கு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வெட்கம் கெட்டவனே புலிகளின் காலத்தில் நீ எங்கே கோமாவில் இருந்தாயா? கோமாளி உங்கலுடன் வாழ்வதை விட சிங்களவருடன் வாழ்வது மேல் என 1815 ம் ஆண்டே முடிவெடுத்து விட்டோம் இனி அதில் எந்த மாற்றமும் இல்லை.வட,கிழக்கில் ஆயுத முனையில் Muslim மக்களின் நிலங்களை,ஊர்களை,சொத்துக்களை கொள்ளையிட்ட மிருகங்கள்.இப்போது அந்த சொத்துக்களை அனுபவிப்பதும் தமிழர்கள்

    ReplyDelete
  2. மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.