சட்டத்தரணி சறூக் விடுத்துள்ள, முக்கிய அறிவித்தல்
- சட்டத்தரணி சறூக் -
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் “அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் ஒருங்கு சேருவதற்குமான சுதந்திரத்தின் விசேட அறிக்கையாளரான Clement Nyaletsossi Voule இன்று (18/07/2019)இலங்கைக்கான 9 நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இவரின் பணிகள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் 44 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2/06/2020 திகதி சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் நடைபெறும் அப்போது இலங்கை அரசானது அங்கு வாழ்கின்ற தனது பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை குறிப்பாக “அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் ஒருங்கு சேருவதற்குமான சுதந்திரத்தினை சரியாக பாதுகாத்துள்ளதா? இல்லையா? “ என்பதை அறிக்கை இடுவதே இவரின் பணியாகும்.
விசேடமாக எமது கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் முஸ்லிம்களாகிய எமக்கும் ஏப்ரல் 21ம் திகதி குண்டு வெடுப்பின் பின்னர் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் ஒருங்கு சேருவதற்கும் எமக்கு இருக்கும் சுதந்திரத்தினை இல்லாமலாக்குவதற்கு ஏதுவாக இருந்த காரணிகள் எவை என்பதை அறிக்கையிடுவதே இவரின் பிரதான நோக்கமாகும்.
அறிக்கையிடுவதால் என்ன நடக்கும்?
இலங்கையரசானது தனது பிரஜைகளின் மனித உரிமைகளை சரியாக பாதுகாத்து சட்ட ஆட்சியை நிலை நிறுத்தியிருந்தால் ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையின் 2030 ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளையடைவதற்கான உதவி ஒத்தாசைகளுக்கான பரிந்துரைகளை அது செய்யும்.
இலங்கையில் தற்போது மேற்கூறப்பட்ட உரிமைகளை தனது பிரஜைகளுக்கு வழங்குவதற்கான சட்டவாட்சியிருக்கிறதா?
ஜனாதிபதியும் பிரதமரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக விண்ணப்பித்திருக்கும் கணவன் மனைவி போல இருப்பதால் இலங்கையின் அரசாங்க நிருவாகம்கவனிப்பற்ற பிள்ளையாக இருந்து வருகிறது.
இதில் கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகிக்கொண்டிருக்கிறானுகள். இதிலெங்கே சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது.
இதனை நாம் ஏப்ரல் 21 தற்கொலை குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்ததும் பாதுகாப்பை பலப்படுத்த முடியாத கையறு நிலையில் எமது அரச இயந்திரம் இருந்துள்ளது என்பதனூடாக கண்டுள்ளோம்.
இதனால் முஸ்லீம்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்?
ஏப்ரல் 21ன் எதிர்பாராத குண்டு தாக்குதல்களின் பின்னர், அரசானது அவசரகாலச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.
உண்மையாக குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவியல் புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் விசாரிக்கப்பட ஏனைய அப்பாவி முஸ்லிம்கள் சமூகத்தில் காணப்படும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுமவர்களின் காட்டுக்கொடுப்பினால் சிறை சென்று பல சித்திரவதைகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த அப்பாவிகள் தமது ஏகத்துவ கொள்கைக்காக “அமைதியான முறையில் ஒன்று கூடி ஒருங்கு சேர்ந்திருந்தனர்”
இந்தச் சுதந்திரம் எமது அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)B மற்றும் C யினால் எமக்குரித்தான உரிமைகளாகும்.
தமது சமூக விரோத செயல்களுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் ஏகத்துவ வாதிகள் அனைவரும் சட்டவிரோத கைதுகளுக்கும் தடுப்பு வைத்திருப்பதற்கும் உள்ளாகிக்கொண்டிருக்கினர்.
இவர்கள் சிறைகளில் என்ன வென்ன சித்திரவதைகளுக்கு உள்ளடக்கப்பட்டிருந்தனர்?.
1.அவர்களை உறவினர்கள் பார்ப்பதற்கு சிறை காவலர்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும்.
2.சிறைவாசிகள் இலஞ்சம் கொடுக்காவிட்டால் 30’X40’ பரப்பளவுள்ள அறைகளில் 130-140 கைதிகளை தூங்கப்போடுதல். இதில் போதைக்கு அடிமையாகியவர்களுடன் பல பயங்கர ரவ்டிகளும் இந்த அப்பாவிகளுடன் அடைக்கப்படுகின்றனர்.
ரூ.35,000/= தொடக்கம் ௹ 500,000/= வரை இலஞ்சம் கொடுத்தால் குறைந்தது 20’X25’ பரப்பளவுள்ள அறையில் 40 -65 கைதிகள் தூங்குவதற்கான இடம் கொடுத்திருக்கிறார்கள். கொடுக்கும் இலஞ்சத்தின் பெறுமதிக்கு ஏற்ப வசதிகள் வேறுபடும்.
3.பணம் கொடுத்தால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கும்.
4.இரு கைதிகளினது தாடிகள் இரண்டை கட்டிவிட்டு இழுபட வைத்தல்.
5.கழிவறை மற்றும் குளியலறைகளில் கைதிகளை தூங்க வைத்தல்.
6.நின்ற நிலையில் தூங்க வைத்தல்.
இவ்வாறானவைகளுக்கு எவ்வாறு இலஞ்சப்பணம் வழங்கப்படுவதென்றால் easy cash பரிமாற்றம் மூலமாகவே இடம் பெற்றுள்ளது. அது தான் அவர்கள் மாட்டுப்படாத வழிமுறையாகும்.
இவ்வாறான சித்திரவதைகளுக்கு காரணமாக அமைந்தது இந்த அப்பாவிகள் “அமைதியான முறையில் ஒன்று கூடி ஒருங்கு சேர்ந்திருந்தமையாகும்”.
அதாவது இவர்கள் தான் உண்டு தனது பாடுண்டு என தனது ஏகத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றமேயாகும்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் பாரம்பரிய முஸ்லிம்கள் தொழும் பள்ளிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட பகுதிகளைச்சேர்ந்த பொலிஸ் உயரதிகாரிகளுடன் சேர்ந்து சட்டவிரோதமாக, ஏகத்துவம் பேசும் பள்ளிகளைகளையும் மத்ரசாக்களையும் திறக்கவிடாமல் தடுத்துக்கொண்டேயிருக்கின்றனர் அல்லது திறந்தவைகளை மூடவைக்கின்றனர்.இவர்களின் செயற்பாடுகளும் மேற்கூரிய அடிப்படை உரிமையாகிய “அமைதியான முறையில் ஒன்று கூடி ஒருங்கு சேர்ந்திருந்தமைகளை மீறும் செயற்பாடுகளாகும்”.
எனவே இலங்கைக்கு வரும் குறித்த அறிக்கையாளர் கொழும்பு,வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு என நாட்டின் எல்லாம்பகுதிகளக்கும் விஜயம் செய்வதுடன் அரசியல்வாதிகள்,ஊடகவியலாளர்கள்,ஐக்கிய நாடுகள் இலங்கை பிரதிநிதிகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,சிவிலமைப்புக்கள் மற்றும் நீதித்துறையினர்களையும் சந்திக்கவுள்ளார்.
எனவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையிலிருப்பவர்களின் உறவினர்கள்,கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் மற்றும் இப்போது தனது அடிப்படை உரிமையாகிய அமைதியான முறையில் ஒன்று கூடி ஒருங்கு சேர்ந்திருக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க முடியாதவர்கள் உடனடியாக தாங்களாகவோ அல்லது குழுவாகவோ அல்லது தங்களது அமைப்பின் ஊடாகவோ இவரை சந்தித்து தாங்கள் பட்ட அல்லது படும் இன்னல்களை அறிக்கையாக வழங்குங்கள்.
இந்த அறிக்கைகளிலுள்ள அடிப்படை உரிமை மீறல்கள் அடுத்தவருடம் ஜூன் மாதம் ஜெனிவாவில் பேசப்பட்டு இலங்கை அரசிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்
வகிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் இலங்கைக்கான சில நிபந்தனைகளை விதிக்கின்ற போது எதிர்காலத்தில் இப்படியான உரிமை மீறல்கள் அரச இயந்திரங்களால் ஏற்படாத வகையில் இலங்கையரசு பார்த்துக்கொள்ளும். எனவே
எமக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திடம் கூறுவதற்கான ஒரு அரிதான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயன் பெறுவோம்.
சட்டத்தரணி சறூக்
Iraiwanin udawi undaahattum.....
ReplyDeleteHow can we meet
ReplyDeleteகட்டாயமாக அனைத்து தரப்புகளும் ஒருங்கினைந்து அவரை சந்தியுங்கல்.ஆதாரத்துடன் உண்மைகளை கூறுங்கள்.நாட்டில் உள்ள சில இனவாத அரசியல் சாக்கடைகள் பேசும் இனவாத செய்திகளை ஆதரத்துடன் தெளிவு படுத்துங்கல்.சில இனவாத ஊடகங்களின் இனவாத கூட்டிக் கொடுப்பையும் விவரமாக சொல்லவும்.அரசால் கூட கட்டுப்படுத்த முடியாமல் தீ விட்டு எரியும் Muslim களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் மற்றும் அண்மைய எமக்கெதிரான வன்முறைகள் மற்றும் அந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அனத்து நபர்களும் அவரை சந்தியுங்கல்
ReplyDelete