Header Ads



அரசியல் இலாபத்துக்காகவே முஸ்லிம், பிரதிநிதிகளுக்கு எதிராக போலி குற்றச்சாட்டு - ரிஷாத்

அரசியல் இலாபத்துக்காகவே எதிரணியினர் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நான்  எந்த குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்யாதவர்கள் மீது போலி குற்றச்சாட்டை முன்வைத்து ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான  பொலிசார் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  

அத்துடன் தேவைக்கதிகமான காணிகள் என்னிடம் இருப்பதாகவும்  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு காணிகள் என்னிடம் இருக்குமாக இருந்தால்  நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தாக்கல் செய்து அதனை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ரிஷாத் பதியுதீன்  எம்.பி. மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இன்று திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு  அவை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இன்று அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் ரிஷாத் பதியுதீன் இன்று காலை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.