தமிழர் அரசியலும், கிழக்கு மாகாணமும்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
வரலாற்றில் மக்கள் உரிமைகளை மேம்படுத்தி வாழ்வதுதான் அரசியலின் அடிப்படை. அரசியல் பிரச்சினைகளை ஏமாற்ற வாய்ப்பில்லாத வகையில் யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.
.
கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட்ட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் வங்கியில் உள்ளதாக தெரிகிறது. இபோதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் இந்திய சர்வதேச உதவிகளும் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழர்கள் அரசியல் வடக்கின் செல்வம் கிழக்கின் வறுமை இலங்கையில் மலைக தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்களின் - ஏனைய இனங்களின் அரசியல் - இந்தியா உட்பட இந்து சமுத்திர சர்வதேச அணி என்பவற்றால்தான் தீர்மானமாகப் போகிறது என்பது தெளிவாகிவருகிறது.
.
தமிழ் முஸ்லிம் உறவின் அமைப்பு தமிழரும் கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்களும் என்கிற வடிவத்தில்தான் இருந்தது. இப்ப மலையக +தெற்க்கு தமிழர்களும் இலங்கை தமிழர்களும் இலங்கை மற்றும் இந்துசமுத்திர அரசியலின் மேலோங்கிவரும் தாக்கத்தால் ஒருங்கிணைந்து வருகின்றார்கள். இங்குதான் மனோகணேசன் முக்கிய பாத்திரமாக மேம்படுகிறார். அதனால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு தமிழர்களது வடகிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமையுடனான உறவு தெற்க்கு முஸ்லிம் தலைமையுடனான உறவு என பன்முகப்படும் என்பதை உணர்கிறேன்.
கிழக்கு முஸ்லிம் தமிழ் நல்லுறவு பொறுத்து கல்முனை வடக்கு கோரிக்கையை முஸ்லிம்களும் தென்கிழக்கு மாகான கோரிக்கையை தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் நிலைபாடு, முஸ்லிம்கள் நிலதொடர்பற்ற தனி மாகாணம் கோரினாலும் தமிழர் அதனை திறந்த மனதுடன் பரிசீலித்து ஆதரிக்க வேண்டும். வடகிழக்கின் அரசியலை நாலை கொழுபு தீர்மானித்தாலென்ன சர்வதேச சக்திகள் தீர்மானித்தால் என்ன தமிழர் மலையக தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுதான் சுபீட்சத்தின் அழவுகோலாக அமையும்.
.
வடகிழக்கு தமிழ் முஸ்லிம் உறவு கல்முனை வடக்கு பிரச்சினையை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறது. கல்முனை வடக்கு பிரச்சினையின் தீர்வு வடிவமே எதிர்காலத்தில் மூதூர் உட்பட சகல தமிழ் முஸ்லிம் பிரதேச பிரச்சினைகளின் தீர்வுக்கான முன் உதாரணமாகவும் வாய்பாடாகவும் அமையப்போகிறது. அதன் அர்த்தம் தமிழரைப் பொறுத்து மூதூரிலோ வேறு இடங்களிலோ மறுக்கும் எதனையும் கல்முனையில் கோர முடியாது என்பதாகும், முஸ்லிம் தலமைகளைப் பொறுத்து கல்முனையில் விட்டுக்கொடுக்க மறுக்கும் எதனையும் மட்டக்களப்பு மாவட்டத்திலோ வேறு இடங்களிலோ கோரமுடியாது என்பதாகும்.
கல்முனையை தொடர்ந்து வடகிழக்கில் குறிப்பாக முன்னர் முஸ்லிம் தமிழ் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூரில் இரண்டு முஸ்லிம் பிரிவுகள்ம் (மூதூர், தோப்பூர்) ஒரு தமிழ் பிரிவும் (சம்பூர்) ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழரும் முஸ்லிம்களும் இணங்கி இந்த அரசின் காத்திலேயே மூதூர் தோப்பூர் சம்பூர் பிரதேச செயலகத்தையும் பிரதேச சபைகளையும் பெற்றுவிடுவது நன்று.
.
வடகிழக்கு தமிழ் அரசியலில் வடக்கில் முதலிலாவதாக உரிமைப் போராட்டம் இரண்டாவதாக அபிவிருத்தி என்றும் கிழக்கில் முதலாவதாக அபிவிருத்தி இரண்டாவதாக உரிமைப் போராட்டம் என்கிற சமூக பொருளாதார அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த அரசியல் சிக்கலுக்கு அரசியல் தீர்வை கொண்டுவருவது தொடர்பாக 10 வருடங்களாக ரணில் அரசினால் தமிழர் கூட்டமைப்பு ஏமாற்றபட்டு வந்ததே காரணமாகும். ஏமாற்றப்பட்டபோதும் ரணில் அரசுக்கு முண்டு கொடுத்த கூட்டமைப்பு ஆதரவுக்குப் பதிலாக அபிவிருத்தியை விலையாக பெற்றிருக்க வேண்டும். இப்போதும்கூட இலங்கையின் சோமாலியாவாக சிதைந்துபோயிருக்கும் படுவான்கரை அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச உதவியுடன் ஒரு ஒருங்கிணைந்த சமூக பொருளாதா அபிவிருத்தித் திட்டத்தை பெறுகிற அக்கறை கூட்டமைப்பிடம் காணமுடியவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. இதுவே கிழக்கில் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் பாரிய சிக்கலாகும்.
.
கிழக்கின் சோமாலியா தன்மையை கண்டுகொள்ளாமைதான் இன்று கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சிக்கலாகும். இதனால் எதிர்கால அரசியல் முடிவுகளை அப்படியே கூட்டமைப்பிடம் கொடுத்து விடுவதில் பயனில்லை என்கிற முடிவை நோக்கி கிழக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ரணில் அரசுக்கு அளித்த ஆதரவுக்கு பிரதி உபகாரமாகவேனும் கிழக்கிற்க்கு பாரிய வறுமை ஒழிப்புக்கும் அபிவிருத்துக்கும் வழிவகுக்கும் விசேட திட்டமொன்றை கொண்டுவராமல் கிழக்கில் கூட்டமைப்பு அரசியல் தொடரும் வாய்ப்புகள் குறைந்து வருகிறது.
.
அரசுக்கு ஆதரவு கொடுத்தவாறே சோமாலிய வறுமையில் வாடிய கிழக்கில் நிலமைகள் மாற்றமடைந்து வருகிறது. அரசியலில் வடக்கில் தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு வெளியில் இருந்து உரிமைக்கு போராடுகிறதும் கிழக்கில் தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளித்து அமைச்சு பதவிகளை ஏற்க்கிறதும் என்கிற வடிவத்தை நோக்கியே ஈழ அரசியலில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றுமில்லாமல் வெறுமனவே ரணில் அரசை ஆதரிப்பதைவிட தமிழர் கூட்டமைப்பின் உரிமைப் போராட்டத்துடன் கிழக்கின் அபிவிருத்தியை இணைப்பதால் ஒன்றும் குறைந்துபோகாது என்கிற கருத்து வலுவடைந்து வருகிறது. இதனை கூட்டமைப்பு இன்னும் கண்டுகொள்ளவில்லையென்பது வருத்தமாக உள்ளது.
.
பிரபாகரன் இல்லாத சூழலில் தமிழர் அரசியல் உரிமைக்கு உள்வாரி போராடங்களில் தங்கியிருக்கும் சூழலும் வல்லமையும் இல்லாது போய்விட்டது. அதனால் தமிழர் பிரச்சினை இது சமுத்திரம் சர்வதேசமென பரந்து வலிமை பெறுவது அவசியமாகின்றது. இந்து சமுத்திர சர்வதேச மயப்படும் தமிழர் அரசியலில் மலையகதமிழர்கள் முஸ்லிம்களுடனான அரசியல் உறவுடன் ஒப்பிடுகையில் மகிந்தாவா ரணிலா என்கிற அரசியல் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. புதிய சூழலில் வடக்கில் உரிமைப் போராட்டமும் அபிவிருத்தியும் கிழ்க்கில் அபிவிருத்தியும் உரிமைப் போராட்டமும், என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த குரலை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் எதிர்கால தமிழரின் அரசியல் நிர்ணயமாகப் போகிறது.
திருத்திய வடிவம்
ReplyDeletehttps://www.facebook.com/jaya.palan.9/posts/10156785408169332?notif_id=1563902553863154¬if_t=feedback_reaction_generic
Poet Jaybalan, you are a great personality working hard to bridge the two minority communities. We are very anxious to see people of your calibre from both coimmunities as the gab between them get widen day by day and situation get worsen as some external elements engaged in faning the flame.
ReplyDeleteநல்லது.ஆனால் அகண்ட தென்கிழக்கு மாகாண கோரிக்கைக்கு ஒரு போதும் கிழக்கில் தற்போது உருவெடுத்திருக்கும் புதிய தமிழ் இனவாதம் ஒரு போதும் ஆதரவு தரப் போவதில்லை,என்பது மட்டும் உறுதி.ஆனால் Muslim கலும் அதற்காக தமிழ் இனவாதிகலிடம் கெஞ்ஞ போவதுமில்லை,ஏனெனில் கிழக்கு மாகாணம் எனும் வட்டத்துக்குள் Muslim களுக்கு முடியும் எப்போதும் முதலமைச்சரையும்,கிழக்கு மாகாண ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள.
ReplyDeletePoet Jayabalan, you are a great personality and working very hard to bridge the both minority communities. We are very anxious to see more and more people of your calibre from Tamil and Muslim communities.
ReplyDeleteIn the recent past we have seen that the gab between these communities getting widen and some elements are exploring the situation and make it worsen while faning the flame.
Now we have to do some more exercise and some additional home work to identify the opportunists and alarming these communities to get beware of them.
தங்களின் அரசியல் கருத்துகள், சமூக ஒற்றுமை சார்ந்தவையாகவும் ஓர் உயிரோட்டம் உள்ளவையாகவும் இருக்கும்.
ReplyDeleteஅரசியல்வாதிகளிடம் அவை பெரும்பாலும் தென்படுவதில்லை. ஏனோ? நன்றி பெரியவரே.
நன்றி நண்பர்களே. ஒரு தீர்வுத் திட்டம் என்பது ஒரு திசை காட்டிதான். என்மீது நீங்கள் காட்டும் அனுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். அன்புக்குரிய Rizard, முஸ்லிம்களின் சிந்தனையில் இன்னும் போர் தொடர்வதுதான் பிரச்சினையாக உள்ளது. போர் முடிந்துவிட்டது நண்பா. முன்னர்போலல்ல, இப்ப முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழரும் தேசிய கச்சிகளின் ஆதரவை பெறக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. சென்ற முறை பிள்ளையான் கருணா ஆதரவை நிராகரித்து முஸ்லிம்காங்கிரசை கூட்டமைப்பு ஆதரித்தது. எதிர்காலத்தில் கூட்டமைப்பு அத்தகைய முடிவை எடுக்கும் வாய்ப்புகளில்லை. தமிழரும் முஸ்லிம்களும் சுழற்ச்சி முறையில் முதல் அமைச்சர் திட்டமொன்றை உருவாக்காவிட்டால் ஒவ்வொரு மாகாணசபைத் தேர்தல் முடிவின்பின்னரும் தமிழரும் முஸ்லிம்களும் சிங்கள அங்கத்தவர்கள் ஆதரவைப்பெற போட்டிபோட நேரிடும். மேலும் மாகாணசபையைக் கைப்பற்ற முதல் அமைச்சு அல்லது முக்கிய அமைச்சுகளை சிங்களவருக்கு விட்டுக்கொடுக்க நேரிடும். நிலமையை கற்பனை பண்ணும்போதே அடுத்த மாகானசபை தேர்தலில் கிழக்கு மாகாணசபையில் சிங்களவர் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதை உணர முடிகிறது. மேற்படி சூழல் தமிழருக்கா முஸ்லிம்களுக்கு அதிகம் ஆபத்தானது என்கிறகேழ்வி தவிக்க முடியாதது. .
ReplyDelete