Header Ads



காதி நீதிமன்றம் குடும்பபிணக்குகளை, தீர்த்துவைக்கும் நீதிமன்றமாக்கப்படவேண்டும்


முஸ்லிம்  திருமணம்  மற்றும்  விவாகரத்து  சட்டத்தில்  ஆக்கபூர்வ  மறுசீரமைப்பு  இடம் பெறாமல்  போகக்கூடிய ஆபத்து  இருப்பதாக எச்சரிக்கை செய்திருக்கும் நான்கு முஸ்லிம் அமைப்புகள் மறுசீரமைப்பு இடம் பெறாமல்  போகுமேயானால்  திருமண  மற்றும்  விவாகரத்து  சட்டம் மற்றும்  காதி நீதிமன்ற  முறைமைகளின்  கீழ்   முஸ்லிம் பெண்கள் அநீதியையும்  பாரபட்சத்தையும்  தொடர்ந்தும்  எதிர்கொள்ள  வேண்டியிருக்கும்  என்று வருத்தம்  தெரிவித்திருக்கின்றது.

கொழும்பு  -  இலங்கை  மன்றக்கல்லூரியல் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின்  போதே  நான்கு  அமைப்புக்களினதும்  பிரதிநிதிகள் இவ்வாறு  தெரிவித்தனர்.

முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினர் பரியல்  அஷ்ரஃப்  உட்பட   முஸ்லிம்  பெண்கள்  அபிவிருத்தி நிதியம்  (புத்தளம்) ,  ஆராய்ச்சிக்கும் , வலுவூட்டலுக்குமான  பெண்கள்  அமைப்பு  ( மட்டக்களப்பு  ),  முஸ்லிம்  தனியார்  சட்டசீர்திருத்த  குழு  ,  பெண்கள்  நடவடிக்கை  வலைய அமைப்பு   (வடக்கு  - கிழக்கு )  ஆகிய நான்கு  அமைப்புக்களையும் சேர்ந்த  பிரதிநிதிகளும்  கலந்து கொண்டு  தமது கருத்துக்களை  வெளிப்படுத்தியிருந்தனர்.  

முஸ்லிம்  தனியார் சட்ட  சீர்த்திருத்த  குழுவின்  உறுப்பினரும்  சட்டத்தரணியுமான இர்மிஷா ரீகல்  கூறியதாவது , 

முஸ்லிம்  திருமண  மற்றும்  விவாகரத்து  சட்டம்   1951  ஆம்  ஆண்டு  கொண்டுவரப்பட்டது.  இருப்பினும்  இந்த   சட்டத்தினூடாக  முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்றமையினால்  இதில்  மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும்  என  முஸ்லிம் மக்கள் மத்தியில் 30 வருடங்களுக்கு  முன்னர் பேசப்பட்டது. இருப்பினும் இது வரையில் எத்தகைய  மாற்றமும்  இடம் பெறவில்லை.   இந்த  சட்டங்கள்  அனைத்தும்  மனிதனாலேயே  உருவாக்கப்பட்டவையாகும்.  இவ்வாறாக  உருவாக்கப்பட்ட  மற்றைய  சட்டங்களில்  தற்போது  மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இருப்பினும்  இந்த  சட்டத்தில் மாத்திரம்  எத்தகைய  மாற்றமும்  இது வரையில்  ஏற்படுத்தப்படவில்லை.  இது  மாற்றப்படவேண்டியதொரு  சட்டமாகும். 

நாட்டு மக்களை  ஒழுங்கு  விதிமுறைகளுக்கு அமைய ஒழுங்கு படுத்துவதற்காகவும்,  அவர்களை மகிழ்ச்சியாக  வாழ  வைப்பதற்காகவும்  உருவாக்கப்பட்டதே  சட்டமாகும் .  இவ்வாறாக ஒழுங்கு  படுத்தப்பட்ட  மக்களை  நல்வழிப்படுத்து வதற்காக உள்ளதே மதங்களாகும்.  மாறாக  இந்த திருமண மற்றும்  விவாகரத்து சட்டத்தினூடாக முஸ்லிம்  பெண்கள்  பெரிதும்  பாதிப்புக்குள்ளாகின்றனர். மதக்கோட்பாடுகளுக்கு  உட்பட்டதாகவும் இந்த  சட்டம் இல்லை.  இந்த  சட்டம்  இஸ்லாமிய  மார்க்கங்கள்  கோட்பாடுகளுக்கு  உட்பட்டதாகவும்  இல்லை. ஆகவே ,  இது  முழுமையாக  மாற்றப்பட வேண்டும்.  

எமது நாட்டில் உள்ள  அனைத்துப்பெண்களுக்கும்  பொதுவான  சட்டத்தை  போன்று  இந்த  சட்ட முறைமையும்  அமையப்பெற வேண்டும்.  பொதுவானதொரு சட்டம்  அமைக்கப்படல் வேண்டும். இந்த சட்டம்  முழுமையாக  மறுசீரமைக்கப்படவேண்டும். இதேவேளை , இந்த பிரச்சினைக்கு   உடனடித்தீர்வு  கிடைக்க வேண்டும்.

முக்கிய  கோரிக்கைககள் 

முஸ்லிம்  பெண்களின்  திருமண  வயதெல்லை 18  ஆக்கப்படவேண்டும்.  பெண்களுக்கான  உரிமைகள் மேலோங்கப்படவேண்டும். இஸ்லாத்தில்  பல்வேறு  பிரிவுகள்  காணப்படுகின்றன. அவ்வாறாக  ஒவ்வாரு  பிரிவினருக்கு வேறுபட்ட  சட்டம் என்னும் முறைமை  நீக்கப்பட  வேண்டும்.  மாறாக  அனைவருக்கும் பொதுவான  சட்டமொன்று  அமைக்கப்பட்டவேண்டும். கட்டாயமாக  திருமணச்சான்றிதழில்   திருமணப்பெண்ணின்  கையெழுத்தோ  அல்லது  விரலடையாளமோ  இடுவதற்கான இடம்  ஒதுக்கப்பட்டிருத்தல்  வேண்டும். 

விவாகரத்தின்  போது  ஒரு  தரப்பினருக்கு  மாத்திரம்  தீர்மானம்  எடுக்கும் உரிமை  அளிக்கப்பட்ட  நடைமுறை  மாற்றப்பட்டு பொதுவாக  தீர்மானம்  எடுப்பதற்கான  நிலைமை  தோற்றுவிக்கப்பட்டுவேண்டும்.  அத்துடன்,  காதி நீதிமன்றம்  முறைமை    குடும்பபிணக்குகளை  தீர்த்து வைக்கும்  நீதிமன்றமாக்கப்படவேண்டும்.  இந்த  முறைமையின்  கீழ் நீதிமன்றத்தில் தனிநபர்  உரிமைகள் மற்றும்  தகவல்கள்  பாதுகாக்கப்படல்  வேண்டும் .

10 comments:

  1. பெண்கள் சீரழிவது உங்கள் விருப்பம் போலும்

    ReplyDelete
  2. கிளம்பிட்டாங்க !! இஸ்லாம் தெரிந்த மொக்காட்டு
    மாமிகள்,
    கூலிக்கு மராப்பு தூக்கம் மூளைசாலிகள்

    ReplyDelete
  3. குர்ஆன், ஹதீத் அடிப்படையில் மார்க்க தீர்வு வழங்க கூடிய காழிகள் உருவாக்கபட்டு அதற்குரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமே தவிர காழி நீதிமன்றம் இல்லாமல் ஆக்கப்படுவதை அறிவுடையோரின் செயல் அல்ல!

    மார்க்க அறிவற்ற அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் காழிகளாக வருவார்களாயின் இதே நிலை தொடரும்.

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டுங்கள் என்ற கோசம் இடம் வேண்டிய ஈமானிய சீதேவிகள்,
    அல்லாஹ்வின் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோசமிடும் மூதேவிகளாக மாறும் காலம் வருவதற்கு முன்னால் இப்படியான புற்று நோய்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டியது மார்க்க தலைமைகளின் அவசியப்பணி

    ReplyDelete
  5. மேற் கூறிய சட்டத்தில் குர்ஆனும் ஹதீஸும் மாத்திரம் உள்வாங்கப்படும் போது சகல மனிதர்களுக்களுக்கும் பொதுவானதாக அமையும் அதிலே எந்த சிக்கலும் வராது காரணம் அல்லாஹ்வின் சட்டம்

    ReplyDelete
  6. They want go open like here and eventually they would create single mums..this is roman Dutch law to repeal and repeal...don't go against the Creator and you would see the punishment first sign would be loss of tranquility.some of these ladies were athists earlier and now have come to reform Islamic laws...???

    ReplyDelete
  7. இது உலமாக்களினதும் சட்டஅறிஞர்களிதும்; தொழிற்பாடாகும். ஏனையோர் தம் மூக்கையும் வாயையும் பொத்திக் கொண்டு நடப்பதை சற்று அவதானித்துக் கொண்டிருங்கள்.

    ReplyDelete
  8. இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்த பெருந்தலைவரின் மனைவி இந்த நஜீஸ் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டது வேதனையான விடயம். பணம் யாரை தான் விட்டு வைத்தது

    ReplyDelete
  9. ,q;F ,];yhkpa rl;lj;ij Ngdhj Kf;fhL Nghlhj ngz; Kd;dpiyg; fUj;Jf; $Wtij Vw;Wf;nfhs;s KbahJ.
    ehd; mwpe;jtiuapy; kiya K];ypk;fs; ,];yhkpa rl;lq;fis KOikahf gpd;gw;Wgth;fs; my;yh;. ,th;fs; Nrh;e;J thOk; ,dq;fspd; fyhr;rhuq;fisAk; gpd;dw;wp tho;gth;fs;. vdNt ,th;fspd; fUj;Jf;fis Vw;Wf;nfhs;s KbahJ.

    ReplyDelete
  10. உண்மையில் காதி நீதிமன்றம் மறுசீரமைக்கப்பட வேண்டுமே தவிற இல்லாது ஒழிக்க வேண்டும் என்று கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.தற்போது உள்ள காதி நீதிமன்ற முறைமையினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை மறுக்க முடியாது. உதாரணமாக தற்போது ஒரு தாய் தனது குழந்தையினை பராமரிக்க 1500ரூபா முதல் 2500ரூபா வரையிலேயே வழங்கப்படுகிறது இது போதுமானதுதானா? இவ்வாறான குறைகள் களையப்பட்டு புனித குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.