புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் திஸ்ஸ
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, பிரபலமான அரசியல்வாதிகள் பலருடன் இணைந்து, புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னுதாரண அரசியலுக்கான மக்கள் அமைப்பு என்ற பெயரில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக விஜேதாச ராஜபக்ச, ரெஜினோல்ட் குரே, அதாவுத செனவிரத் போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும், எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கட்சியை ஆரம்பித்து வைக்க உள்ளதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசியல் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்கு சார்பான தலைவருக்கு ஆதரவளிக்க எண்ணியுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு தற்போது நாட்டின் பிரதான தேவையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment