சாதாரண மக்களை விட அரசியல்வாதிகளுக்கு, மனநலப் பிரச்சினை ஏற்படும் அபாயம்
சாதாரண பொதுமக்களை விடவும் அரசியல்வாதிகளுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாகவுள்ளதாக பிரித்தானிய புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியாவிலுள்ள சாதாரண பொதுமக்களை விடவும் 26 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் மன அழுத்தம்இ பதற்றம் மற்றும் விரக்தியை உணர்வது கண்டறியப்பட்டுள்ளது.
பரபரப்பான வேலைத் திட்டங்கள், இணையத்தளம் மூலமான அவதூறு செய்யும் விமர்சனங்களிலிருந்து பாதுகாப்பின்மை என்பவை காரணமாக அரசியல்வாதிகள் பெரிதும் மன அழுத்தத்திற்குள்ளாவதாக லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேற்படி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைகளின் அனைத்து 650 உறுப்பினர்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது மனதை ஒருமுகப்படுத்துவதிலான போராட்டம்,உறக்கத்தில் ஆழ்வதில் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் நாளாந்த செயற்பாடுகளில் மகிழ்ச்சியடைய முடியாதிருப்பது என்பன குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்விகள் வினவப்பட்டன. அதேசமயம் இந்த ஆய்வில் 2,902 பொதுமக்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநலம் தொடர்பில் நடத்தப்பட்ட முதலாவது ஆய்வு இதுவென மேற்படி ஆய்வில் பங்கேற்ற மருத்துவ கலாநிதி டான் போல்டர் தெரிவிக்கிறார்.
It's may be above 75 percentage ib Sri Lankan parliamentarians.
ReplyDelete