முஸ்லிம்களின் காணிகளை தமிழ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கைப்பற்றும் நடவடிக்கை தொடர்கிறது
தனது தமிழ் சமூகத்திலிருந்து எவரோ ஒருவர் சொன்ன வாய் பேச்சை வைத்து தன் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் தன் சமூகத்தின் உரிமைகள், இருப்புக்கள், வாழ்வாதாரம் பறி போவதாகவும் பகிரங்கமாக ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும் தமிழர் தரப்பின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கும் முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தன் சமூகம் சார்ந்து சொன்ன கருத்துக்களை முந்தியடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகள் மூலம் விமர்சிக்கும் நாம் இழந்து போயுள்ள எமது உரிமைகள், நிலபுலங்களை, பிரதேச எல்லைகளை மீட்க என்ன முன்னெடுப்புகளை செய்துள்ளோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி கேள்வி எழுப்புகிறார்.
வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் தலைமைகள் அறிக்கை விடுவதையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
முன்னூறு கிராமங்களும் வீதிகளும் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டுள்ளதையும் தமிழ்ப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதராமில்லாமல் பொறுப்பு வாய்ந்த தமிழ் தலைவர்களில் ஒருவரான விக்னேஸ்வரன் ஊடங்களில் பகிரங்கமாக சொன்ன அபாண்டங்களை அவர் சமூகம் சார்ந்தும் அவரது எதிர்கால அரசியல் சர்ந்ததாகவும் அதன் பின்னாலுள்ள சக்திகள் பின்னணிகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டுமே தவிர வெறுமனே அவருக்கெதிரான ஊடக அறிக்கைகளால் எதனையும் நாம் சாதித்து விடமுடியாது.
நாம் இழந்துள்ளத்தை பகிரங்கமாகப் பேசி, அதற்காகப் போராடததன் விளைவுகள் தான் இவ்வாறான அறிக்கைகளுக்கு காரணம் எனலாம். கோறளைப்பற்று மேற்கில் பறி கொடுக்கப்பட்ட காணிகள் மீட்கப்படவில்லை. வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை உருவாக்கம் இழுபறி நிலையில் உள்ளதமையால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருக்கிறோமா? மீனவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளது. அதற்கான சரியான தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வயற்காணிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் என அடுக்கிக் கொண்டே போகுமளவிற்கு எம் சமூகத்தின் பிரச்சினைகள் நிறைந்துள்ளன.
நாம் இதையெல்லாம் பகிரங்கமாக எடுத்துரைத்து தீர்வு காண்பதை விட்டு விட்டு அறிக்கைகள் விடுவதால் ஆன பயன் என்பதயும் நாம் அலச வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்கான முன்னாள் நீதிபதி ஒருவர் ஆதாரமற்ற செய்திகளை விட்டு இன முரண்பாடுகள் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். எமது சமூகம் கடந்த கால யுத்த சூழலிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பேசப்படுவது தான் இவ்வாறான கருத்துக்ளுக்கு பதிலாக அமையும்.
வடக்கில் முஸ்லிம்கள் பலவந்தமாக துரத்தப்பட்டு பல கிராமங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதே நிலைமை கிழக்கிலும் குறிப்பாக எமது பிரதேசத்தில் குஞ்சான்குளம், காயங்குளம் பகுதிகளிலும் தமிழ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தலையீடுகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
எமது பிரதேசத்தில் எழும் காணிப்பிரச்சனைகளின் போது கூட தமிழ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் களத்தில் நின்று போராடி கையகப்படுத்தும் நிலை தொடர்கிறது. இதையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு அறிக்கையூடாக அரசியல் செய்து விட்டுப்போவதால் சமூகம் அடையப்போகும் நன்மை தான் என்ன?
பிரதேசத்திலுள்ள காணி எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக வரமுடியாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளை, எமக்கு கிடைக்கிற திறமையான அதிகாரிகளையும் இழந்தே வருகின்றோம்.
அண்மையில் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்களில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவானவையே வழங்கப்பட்டன. இந்த விடயத்தில் கூட அரசியல்வாதிகளும் பிரதேச செயலாளர்களும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகள், முன்னெடுப்புக்கள் என்ன?
ஆகக்குறைந்து குறித்த பிரதேச எல்லைக்குள் வருகின்ற காணிப் பிரச்சனைகளை தீர்க்க நீதி மன்றங்களை நாடுகின்ற போது குறித்த காணி தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேச செயலக எல்லைக்குள் உள்ளதென்பதைக் கூட ஊர்ஜிதப்படுத்தி ஆவணங்கள், கடிதங்களை வழங்க முடியாத அரச அதிகாரிகளை பெற்றுமுள்ளமை எமது சமூகம் பெற்றுள்ள துர்ப்பாக்கி நிலை என்று சொல்வதை விட வேறில்லை.
தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்கள் சமூகம் சார்ந்து குரல் கொடுப்பதையும் அதிகார ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் இனவாத நடவடிக்கையாக நாம் விமர்சிக்க முடியாது. அது அவர்கள் இனம் சார்ந்த நடவடிக்கையாகும். இதற்கெதிராக அறிக்கை விட்டு எமது கையாலாகாத தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமே தவிர ஆக்கபூர்வமான எந்த செயற்பாடுகளும் எம்மிடம் இல்லை.
அரசியல்வாதிகள் தமக்கான வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு செயற்படுவதனால் இவ்வாறான சூழ்நிலைகளில் பேச முடியாதவர்கள் இருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளாவது அவர்களது கடமைகளையும் சமூகம் அவர்களிடம் எதிர்பார்க்கும் தீர்வுகளையும் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்பதாகவே தோன்றுகிறது. அரசியல் இயந்திரம் அவ்வாறு என்றால் அரச இயந்திரமும் இது விடயங்களில் மெத்தன போக்கையே கடைப்பிடிக்கின்றன.
இன்னும் எவ்வளவு எமது காணிப்பிரச்சினை தேர்தல் கால கோசங்களாக இருக்கப் போகிறது? எவ்வளவு காலம் இதையே காட்டி இரு கட்சிகளும் அரசியல் செய்யப் போகிறீர்கள்? என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் உண்மை நிலவரம் வடக்கிலும்,கிழக்கிலும் புலி பயங்கரவாதிகலால் துரத்தப்பட்ட Muslim களின் காணிகள்,அசையும்,அசையா சொத்துக்களை புலிகள் தமிழருக்கு வழங்கினார்கள்.அந்த கள்ல,கொள்ளை அடித்த அனைத்து Muslim களின் உடமைகளையும் அப்போது முதல் இன்னும் அனுபவிப்பது தமிழர்கள்.எப்போதுமே அடுத்தவனின் சொத்தை கொள்ளையடித்து,ஆயுத முனையில் அபகரித்து அதை தமிழருக்கு வழங்குவதுதான் இழிவான,போர்க் குற்றவாளி பிரபாகரனின் வேலை,
ReplyDeleteYes Asmi, Our society still did not got good leadership.
ReplyDeleteplease cut your hair decently
ReplyDelete