"இதுதான் உலகக்கோப்பை தொடரின் சிறந்த படம்"
செவ்வாய்க்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா வங்கதேச அணியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
வெற்றிக்கு பின்னர் மைதானத்தில் அமர்ந்திருந்த 87 வயதான மூதாட்டி ரசிகையிடம் சாருலதா படேலை சந்தித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உரையாடிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது
கிரிக்கெட் அணியின் வீர்ர்கள் அனைவரும் சென்றவுடன் இந்தியாவின் கேப்டன் விராட் கோலியும், ஆட்ட நாயகன் ரோஹித் ஷர்மாவும் சாருலதா படேல் என்ற 87 வயது கிரிக்கெட் ரசிகையை சந்தித்தனர்.
சாருலதா படேல் இந்திய அணிக்கு உற்சாகமாக ஆதரவு கொடுத்தது நேற்று இணையதளத்தில் வைரலாக பரவியது.
1975-இல் நடந்த முதல் உலகக்கோப்பைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் சாருலதா படேல். பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களைப் பார்த்தவர். இருப்பினும் விராட் கோலியே கிரிக்கெட் வீரர்களில் சிறந்தவர் என அவர் நம்புகிறார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நேற்று தொலைக்காட்சியில் சாருலதாவை சுட்டிக்காட்டி, இதுதான் உலகக்கோப்பை தொடரின் சிறந்த படம் என கூறினார்.
இது குறித்து நெகிழ்ச்சியுடன் விராட் கோலி கீழ்கண்டவாறு ட்வீட் செய்துள்ளார்.
Post a Comment