சஜித் விளம்பரங்களுக்காக, பாரிய செலவு செய்கின்றார், அவரை ஊடகங்கள் உயர்த்திக் காட்டுகின்றன - ரவி
வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச விளம்பரங்களுக்காக பாரியளவில் செலவு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தமது கட்சியில் உள்ள ஆயிரக் கணக்கானவர்களில் சஜித் பிரேமதாசவை மட்டும் ஊடகங்கள் உயர்த்தி காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அழுது புலம்பும் நபராக இருக்கக் கூடாது எனவும் நாட்டுக்கு வெற்றியீட்டிக் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சினை இடம் மாற்றுவது தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிடும் நபர்கள் சஜித் பிரேமதாசவின் வீடமைப்பு திட்டம் குறித்து நாள் தோறும் ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபா விளம்பரம் செய்யப்படுவதனை கண்டு கொள்வதில்லை என ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment