தன்னை ஓவியமாக வரைந்த இளைஞனுக்கு, அரச வேலை வழங்கிய சஜித்
முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் .
குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா என்ற இளைஞனின் திறமையை பாராட்டி தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் வேலை வாய்ப்பை வழங்கியதோடு மேலும் குறித்த சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பட்டதாரி யுவதி ஒருவருக்கும் குறித்த அரச வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை பணித்தார் .
மேலும் குறித்த அரச வேலைவாய்ப்பிற்கான நியமனங்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
THOLIL VENDUMA ?. INDA PADITHA
ReplyDeleteNALLA PUTHISHALIUDAYA,
PADATHAI VARAYUNGAL.
ILANGAYIL,( NIDAHANA )
PUZAYALHAL IRUKKUM IDAM
NANRAAHA, ARINDU VAITHIRUPPAWAR.
நன்றியுள்ள அரசியல்வாதிக்கு முன்னுதாரணம்.
ReplyDelete1990 ம் ஆண்டளவில் இவருடைய அப்பா பிரேமதாஸ அவர்கள் கல்முனைக்கு கூட்டத்துக்கு சமுகமளித்திருந்தார். அப்போது "காலத்தை வென்றவன் நீ" என்ற பாடலை வரவேற்பு பாடலாக பாடினார் ஒரு சிறுமி. அதற்கு அவரும் ஒரு கைமாறு செய்திருந்தார் என்பது ஞாபகம் வருது
ReplyDelete