Header Ads



இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு, மோடிக்கு அவசர கடிதம்

திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை யாழிலுள்ள இந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்திய துணை தூதரின் ஆலோசனையின் பேரில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள்“ என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழிலுள்ள இந்து அமைப்புக்கள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திற்கு சென்று, துணைத்தூதரை சந்தித்து கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. என்ன எந்த நேரமும் தமிழன் தமிழன் என்று கத்துறது ,மோடிக்கு கடிதம் எழுதும்போது மட்டும் ஹிந்துக்களை காப்பாத்துன்னு எழுதுவது .ஏனென்று தெரியுமா மோடி தமிழர்களை மனிதனாகவே மதிப்பதில்லை.இந்த லெச்சணத்தில அவனிடம் போய் உதவி கேக்க உங்களுக்கு வெக்கமாக இல்லையா? தமிழ் நாட்டு விவசாயிகள் டில்லிக்கு சென்று போராட்டம் செய்தார்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினார்கள் ! இவை எதையுமே அவன் கணக்கிலும் எடுக்கவில்லை,உங்களை எப்படிடா ? அவனக்கு தேவை திருகோணமலை அவ்வளவுதான் .நீங்கள் ஞானசார அல்லது அத்துரலிய போன்றோரிடம் முயற்சி செய்து பார்க்கலாமே !!!!!

    ReplyDelete
  2. He, cannot do anything here,
    Because he's big lieyar.?

    ReplyDelete
  3. He will not do anything for hindu!!!

    ReplyDelete
  4. ஹா ஹா சொந்த நாட்டுக்குள் உள்ள இந்துக்கலையே அவரால் காப்பாற்ற முடியாமல் உள்ளார்.அதனால்தான் அங்கே உள்ள தலித் இந்துக்கல் தம்மீது காட்டப்படும் சாதி வாதம்,சமூக ஒதுக்கல்,அவமானங்கல் தாங்க முடியாமல் கண்ணியமான வாழ்க்கை வேண்டி சாரை சாரையாக கிரித்தவத்துக்கும்,Islam மார்க்கதுக்கும் தினம் தினம் சேருகிரார்கல்.சாதிய வன்முறையை அதனால் பாதிக்கப்படும் சாமான்ய இந்துக்கலை சொந்த நாட்டுக்குள் பாதுகாக்க முடியாதவரிடம் போய் ........ முள்லி வாய்க்காலில் இறுதி யுத்த வேளையில் கூட இவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஒரு வார்த்தை கூட Sri Lanka இந்துக்கலை பற்றி பேசவில்லை.ஏன் தமிழ் நாட்டை தவிர வேறு எந்த இடத்திலும் எந்த இந்துவும் ஒரு ஆர்ப்பாட்டமோ அல்லது ஒரு வார்த்தையோ பேசவில்லை,அந்தலவு சாதி வெறி

    ReplyDelete
  5. புதிதாய் சேர்ந்த நண்பர்களுக்கு 2 மாதங்களுக்குள் இவ்வளவு விரிசலா? என்னடா இது,குடை எல்லாம் புடிச்சிட்டு அவர்கலுடன் கும்மாளம்போட்டுட்டு இப்படியா அவியல போய் இந்திய நாட்டிடம் போட்டு குடுக்கிரது.நாங்கல் எப்பபோ சொல்லிட்டம் தம்பி அஜன் அவியலுக்கும் உங்களுக்கும் சரிப்பட்டு வராது குடையல்லம் பிடிக்கதிங்கோன்னு இப்ப போய் அவியலும் நீங்களும் மல்லுக்கட்டிரியல்.ஏனப்பா பிரச்சின உங்கட உண்ணாவிரதம் kalmunai யில் உள்ள (மேடையில்) இடம்பெறக்க அந்த ஜானசாரா வந்து சப்போட் பன்னின மனுசனே அன்மையில் சொல்லிட்டாரு இது சிங்கள நாடு என.சோ விட்டு கொடுங்கப்பா கன்னியா கோவிலை,ஜானசார உங்களுக்கு ஒரு மாதம் time தந்தாரல்லோ அதுக்கு இப்ப என்னாச்சு மாதமும் முடிஞ்சிடுச்சி Anush அன்னே என்னடப்பா சுத்தி சுத்தி அவியல் உங்கட மண்டையிலதான் குட்டிவினம் நீங்களும் 35 வருடமா குனிந்து குட்டு படிரியல்.தல கடுக்கலியோ உங்கலுக்கு

    ReplyDelete
  6. Please ask your God he will help .he couldn't get a support from Tamil nadu .b cos he is the animy of Hindus too

    ReplyDelete

Powered by Blogger.