குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இறந்துவிட, முடிவுக்கு வந்தது கதிர்காமர் படுகொலை வழக்கு
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தேக நபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான முத்தையா சகாதேவன் (வயது 62) என்பவர், கடந்த மாதம் 22 ஆம் நாள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.
மே 30 ஆம் நாள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
இவரது மரணமானத்தற்குப் பின்னர், HC 42/26/2008 என்ற இலக்கமுடைய கதிர்காமர் கொலை வழக்கை தொடர்ந்து நடத்துவதில்லை என்று மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது,
2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் நாள், சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், குறிபார்த்துச் சுட்டதில் மரணமானார்.
BLOODY SHAMELESS TIGERS KILLED ALL THE GOOD PEOPLE BRUTALLY
ReplyDelete