82 மில்லியன் ரூபாய் பெறுமதியான, இரத்தினகல்லை திருடிய நபர் கைது
82 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினகல் ஒன்றை திருடிய நபர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பேருந்து ஒன்றில் வௌ்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து இரத்தினகல்லையும் 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை ஒன்றையும் திருடியதாக முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இரத்தினகல்லையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Post a Comment