மனைவியுடன் இந்தியா செல்லும் ரணில், நாடு திரும்பியபின் ஆகஸ்ட் 5 இல் கூட்டணி ஒப்பந்தம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவசம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்தும் என தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பல பங்காளி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
தேசிய ஜனநாயக முன்னணி என்று அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த கூட்டணி அறிவிக்கப்பபடவுள்ளது.
2
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு முன்னோடியாக அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதற்கான ஆசீர்வாதத்தை பெற இந்திய கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லவுள்ளார் ரணில்.
வரும் 24 ஆம் திகதி செல்லவுள்ள அவருடன் அவரது பாரியார் மற்றும் கட்சியில் நெருக்கமான சிலரும் செல்லவுள்ளனர்.
ஏற்கனவே இந்தக் கோவிலுக்கு சென்றுள்ள பிரதமர் அங்கு வழிபட்டதன் மூலம் நல்ல பலன்களை பெற்றிருப்பதாகவும் அதன் அடிப்படையில் இப்போதும் அவர் செல்வதாக பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. tn
Post a Comment