"ரவி கருணாநாயக்கவை நாட்டை விட்டு வெளியேற்ற 500 கோடி ரூபா செலவழித்தாலும் பரவாயில்லை"
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாட்டை விட்டு வெளியேற்ற 500 கோடி ரூபா செலவழித்தாலும் பரவாயில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
மின்சக்தி எரிசக்தி அமைச்சை வேறு இடத்துக்கு இடமாற்ற 36 கோடி ரூபாவை அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் கோரி இருக்கின்றார். மின்சக்தி எரிசக்தி அமைச்சு தற்போது இருக்கும் இடம் பொருத்தம் இல்லாமல் அல்ல. ரவி கருணாநாயக்கவுக்கு அந்த இடம் பொருத்தமில்லாமல் இருக்கும்.
காரணம் தற்போது இருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சுக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவி சென்றிருக்கின்றார். அவருக்கு அந்த இடம்பொருத்தமில்லாதுபோல் தோன்றியுள்ளது. அதனால் ரவி கருணாநாயக்க தனது அமைச்சை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்றும் அதற்கு 36கோடி தேவை எனவும் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ரவி கருணாநாயக்க செல்லும் அனைத்து அமைச்சுக்களையும் இல்லாமலாக்கி இருக்கின்றார். எனவே அவரை நாட்டை விட்டு வெளியேற்ற 500 கோடி ரூபா செலவழித்தாலும் பரவாயில்லை என்றார்.
Post a Comment