Header Ads



அந்த 4 ஓட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை, அதை நீக்க முடியுமா...?

இங்கிலாந்து-நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ், நடுவர்களிடம் உறையாடிதை ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்துள்ளார்.

உலகக் கோப்பை  போட்டி போது, கப்தில் வீசிய பந்து ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றதால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக, ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பும் கோரினார்.

இந்நிலையில், இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த நேர்காணலில் கூறியதாவது, கிரிக்கெட்டில் ஸ்டம்பை நோக்கி வீசப்படும் பந்து துடுப்பாட்டகாரர் மீது பட்டு சென்றால், துடுப்பாட்டகாரர் ஓட்டங்கள் எடுக்கமாட்டார், அது தான் கிரிக்கெட்டின் பண்பு.

ஆனால், பந்து துடுப்பாட்டகாரர் மீது பட்டு பவுண்டரி சென்றால், அது விதி படி பவுண்டரி தான், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

போட்டிக்கு பின்னர் பென் ஸ்டோக்ஸை சந்தித்த மைக்கேல் வாகனுடன் பேசும் போது, பென் ஸ்டோக்ஸ் உண்மையில் நடுவர்களிடம் சென்று அந்த நான்கு ஓட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை. அதை நீங்கள் நீக்க முடியுமா? என கோரியதாக தெரிவித்துள்ளார்.

எனினும், ஐசிசி-யின் விதியில் உள்ளதால், அதை மாற்ற முடியாது என நடுவர்கள் கூறியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.