46 நாடுகளின் பயணிகளுக்கு சிறிலங்காவில் இலவச VISA ON ARRIVAL
இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“இந்த திட்டத்தை 39 நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
முன்னதாக, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்குப் பயண எச்சரிக்கைகளை விடுத்திருந்த நாடுகள் அதனை விலக்கிக் கொண்டுள்ளன. ரஷ்யா மாத்திரம் அதனை இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை. விரைவில் ரஷ்யாவும் அந்த தடையை விலக்கிக் கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment