Header Ads



கல்முனையை 3 ஆக உடைக்க, இன்று இணக்கம் எட்டப்பட்டது

கல்முனை செயலகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் மூன்று நிர்வாக செயலகங்களாக பிரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சந்தித்துள்ளனர்.

கல்முனை விவகாரம் குறித்து தொடர்ந்தும் அமைச்சர் வஜிர அபயவர்த்தனவை சந்தித்த முஸ்லிம், தமிழ் தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மருதமுனை- நற்பட்டிமுனை பிரதேசத்தை இணைத்து மருதமுனை பிரதேச செயலகம் என மூன்று நிர்வாக செயலகங்களாக பிரிக்களாக பிரிக்கப்படவுள்ளது.

கல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை நீண்ட நேரம் பேசினோம். இங்கு நற்பட்டிமுனை, மருதமுனை மக்களின் தேவைகளை உணர்த்தி மருதமுனைக்கான பிரதேச செயலக உருவாக்கத்தின் அவசியம், மற்றும் அது சார்பிலான சாத்தியபாடுகளை தெளிவாக விளக்கி அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.

மேலும் குறித்த கோரிக்கையின் தேவையை அமைச்சரும் ஏற்றுக்கொண்டார். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் வஜிர பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேச செயலக பிரச்சினை நிறைவுக்கு வரும் அன்றைய தினத்தில் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நகரசபையை உருவாக்குதல் என தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நிரஞ்சன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நானும் ஏ.எல்.எம். நஸீர், எம்.எஸ். தௌபீக், செய்யத் அலீஸாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.