Header Ads



தனது 3 வயது சகோதரியை காப்பாற்றி, தன் உயிரைவிட்ட 5 வயது ரஹீமா (மனதை உலுக்கும் புகைப்படம்)


சிரியாவின் போரின் கோரக்காட்சிகளை புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். அப்படியான ஒரு புகைப்படத்தைத்தான் இப்போதும் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.
கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பு பகுதியான வடமேற்கு சிரியாவின் இட்லிப் (Idlib) நகரில் கடந்த ஏப்ரல் இறுதியிலிருந்து தொடர் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் வான் வெளித்தாக்குதலினால் கடந்த 24 ம் திகதி,புதன்கிழமை அரிஹா,இத்லிப் பகுதியில் உள்ள ஒரு ஐந்து மாடி குடியிருப்புக்கட்டிடம் இடிந்து விழுந்தது.
கீழே விழும் நிலையில் இருக்கும் அந்தக் கட்டடத்தின் நுனியில் ஐந்து வயது சிறுமி ஒருவர் சிக்கியுள்ளார். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பாதி உடல் வெளியே தெரிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த 5 வயது சிறுமி ரிஹாம், கீழே விழ இருந்த, தனது 7 மாதமே ஆன தங்கை துஹா-வின் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர் பிழைத்தது.
மனைவி அஸ்மா நாஹுலையும் இன்னுமொரு மகளையும் பறிகொடுத்து, மற்றும் இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் காப்பாற்ற முடியாமல் நின்றபடி கதறி அழுகிறார் தந்தை. அவர்தான் இக்குழந்தைகளின் தந்தை அம்ஜத் அல் அப்துல்லாஹ். இந்தக்காட்சி ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கட்டடத்தின் நுனியிலிருந்து தங்கையைக்காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம் அல்-அப்துல்லா.மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏழு மாத குழந்தையான துஹா , தலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
``குழந்தை சுவாசிக்க சிரமப்படுகிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தியுள்ளோம்” என மருத்துவர் இஸ்மாயில் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக இட்லிப்பில் நடக்கும் தாக்குதலில் பல நூறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்புப்பணி நிறைவாகி சில கணங்களில் கட்டிடம் நிலத்தோடு சங்கமித்தது.
இது போன்று அன்றாடம் துயருறும் சிரியா மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம்.ஆமீன்.


4 comments:

  1. என்னை அறியாமல் அழுதுகொண்டே இருக்கிறேன். யா ரப்பே சிரியா முஸ்லிம்களுக்கு அமைதியையும் பரக்கத்தையும் கொடுப்பாயாக. இந்த அழிவிட்க்கு காரணமானவர்களை சபிப்பாயாக. (Fouzer)

    ReplyDelete
  2. அவர்கள் அனைவருக்கும் அல்லஹ்வின் சொர்க்கம் தயார் நிலையில் உள்ளது,ஏனெனில் சிரிய மக்களில் இருந்துதான் அல்லாஹ் மஹ்தி ரலியின் வீரமிக்க படையை தெரிவு செய்வான்.சிரிய மக்களால் அல்லாஹ் சுவனத்தை நிரப்புகிரான்.அல்லாஹ் யாவையும் நன்கரிந்தவன்.

    ReplyDelete
  3. Ya Allah grant loftiest stations in Jannathul Firdous to that girl ! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.