Header Ads



வாழைச்சேனையில் முஸ்லிம்கள் 2 ஆவது நாளாக, உண்ணாவிரத போராட்டம்


மட்டக்களப்பு -  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான பிரதேச சபை இன்று வரை உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டடை முன்வைத்து, அஷ்ரப் நற்பனி மன்ற பிரதிநிதிகளால், வாழைச்சேனையில், முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம், இன்று 2ஆவது நாளகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வாழைச்சேனை அஷ்ரப் நற்பனி மன்ற தலைவர் ஏ.எம்.ஹூஸைன் தலைமையில் இடம்பெற்று வரும் இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

எங்களுக்கான பிரதேச சபையை வழங்குவதற்கு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பெற்றுத்தருவதாக காலம் காலமாக ஏமாற்றி வருவதாகவும் எங்களுக்கான சபை கிடைப்பதற்கு சகல தரப்பினரும் முயற்சி செய்து பெற்றுத்தர வேண்டும் என்றும், சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

- எம்.எம்.அஹமட் அனாம் -

1 comment:

  1. அதுக்காக... என்னடப்பா புதுப்புது பக்கமெல்லாம். ஞானசாரர் ஆட்கள் நம்மட ஆட்களையும் நல்லா பழுதாக்கி போட்டாரு கள்.சிறுசிகள் உம்மாமாருக்கிட்ட சாப்பிடாம எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறமாதிரி..

    ReplyDelete

Powered by Blogger.