Header Ads



உலகக் கிண்ணத்தை 2 அணிகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்


லார்டஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் வென்ற இங்கிலாந்து அணி, தனது முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்து-நியூசிலாந்து இடையேயான சூப்பர் ஓவரும் சமன் ஆனதை அடுத்து இங்கிலாந்து வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதிப்போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்ததின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றதாக ஐசிசி அறிவித்தது.

ஐசிசி-யின் பவுண்டரி மூலம் வெற்றியாளரை தீர்வு செய்யும் முறையை விமர்சித்த பல முன்னாள் வீரர்களும், தற்போது விளையாடும் சர்வதேச வீரர்களும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐசிசி-யிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ், ஐ.சி.சி யை ஒரு "ஜோக்" என அழைத்து ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் பத்திரிகையாளருமான ஹர்ஷா போக்லே, வெறும் ஆர்வம் தான். ஸ்காட்டி, இதை நீங்கள் எவ்வாறு தீர்த்திருப்பீர்கள்? மற்றொரு சூப்பர் ஓவர்? விக்கெட் எண்ணிக்கை? பகிரப்பட்ட? என கேள்வி எழுப்பினார்.

போக்லேவின் கேள்விக்கு பதிலளித்த ஸ்காட் ஸ்டைரிஸ், உலகக் கோப்பையை இரு அணிகளுக்கு பகிர்ந்து அளித்திருக்க வேண்டும். இது உரிமையாளர் கிரிக்கெட் அல்ல, அடுத்த சுற்றுக்கு முன்னேற்ற ஒரு வெற்றியாளரைக் கண்டுபிடிக்கும் போட்டியும் அல்ல. இரண்டு அற்புதமான அணிகள் 100 ஓவர்கள் போராடினார்கள் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.