முஸ்லிம் தாய்மாருக்கு 2 தையல்களை போட்ட Dr ஷாபி - பொய்யை பரப்புகிறான் ரதன தேரர்
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகள் சம்பந்தமாக குருணாகல் வைத்தியசாலை பணியாளர்களிடம் வாக்குமூலங்களை பெறும் போது அவர்கள் அச்சுறுத்தப்பட்டு, தகவல் வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது, சம்பவம் குறித்து தேடிப்பார்த்ததில் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -03- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வைத்தியசாலை பணியாளர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சகர் திசேரா, சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது, அது பற்றி ஏன் கூறவில்லை. தற்போது கூறி ஆபத்தில் சிக்க வேண்டி வரும், நாங்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் எனக் கூறி வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வைத்தியசாலை பணியாளர்கள் எழுத்து மூலம் தகவல்களை வழங்கியுள்ளனர். ஒரு விசாரணை நடத்தும் போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தகவல்களை வெளிகொண்டு வர வேண்டும் என்ற போதிலும் இந்த விசாரணையில் தகவல்களை மறைக்க முயற்சித்துள்ளனர்.
மருத்துவர் ஷாபி மேற்கொண்ட சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னர் சிங்கள தாய்மாருக்கு ஏற்பட்ட பிரச்சினை, முஸ்லிம் தாய்மாருக்கு ஏற்பட்டதா என்பது தொடர்பாக தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுக்கொள்ளவில்லை. இது சுயாதீன விசாரணை அதிகாரிகளின் நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல. வைத்தியசாலைக்கு கிடைத்த 850 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் நேரடியாக சட்டவிரோதமான குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை தொடர்பானது.
விருப்பமின்றி அந்த சிகிச்சை செய்வது பெரிய குற்றம். இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொள்ளுமாறு சிங்கள மற்றும் தமிழ் தாய்மார்கள் தூண்டப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி சிங்களம் மற்றும் தமிழ் தாய்மாருக்கு சிசேரியன் சிகிச்சையை மேற்கொள்ள குறுகிய காலத்தை எடுத்துக்கொள்வதாகவும் முஸ்லிம் தாய்மாருக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
அத்துடன் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த பின்னர், சிங்கள மற்றும் தமிழ் தாய்மாருக்கு ஒரு தையல் போட்டுள்ள மருத்துவர் ஷாபி, முஸ்லிம் தாய்மாருக்கு இரண்டு தையல்களை போட்டு, இரண்டு விதமாக நடந்துக்கொண்டுள்ளமை தொடர்பாகவும் தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சையில், சிங்கள மற்றும் தமிழ் தாய்மாரின் கர்ப்பபைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமைக்கான அறிவியல் ரீதியான தடயங்கள் கிடைத்துள்ள போதிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அது பற்றியும் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு வேலை இல்லை.மனைவி,பிள்ளைகள்,குடும்பம் என சந்தோசம் இல்லாத விரக்தி வாழ்க்கை.அய்யோ பாவம்.
ReplyDeleteமுதலில் பெலோப்பியன் குழாய இப்பொது தையல். இவன் ஒரு வேற்று கிரகவாசியோ தெரியவில்லை.
ReplyDeleteThis thero might have mental disorder try to get admitted him in Angoda
ReplyDeleteஇவனுக்கு என்ன நடந்துள்ளது? ?
ReplyDeleteRoom போட்டு யோசிப்பானோ? ஒரு கிருக்கனா இருக்கான். இவனுக்கு uterus, follopian tubes மற்றும் ovaries எல்லாம் எங்க இருக்கின்றன என்றே தெரியவில்லை. தைய்யலப்பற்றி பேசுது இந்த இத்துப்போனது.
விரும்பினால் ஒரு தையலும் விரும்பினால் இரண்டு தையலும் போடுவதற்கு இது என்ன உன்னுடைய கோவணமா? மருத்துவமடா மாடு. இனவாதம் பேசுவதற்கும் கொஞ்சமாவது மூளை வேண்டாமாடா.
ReplyDeleteஇறுதி யுத்தத்தின்போது ஆயுதப்படையினால் LTTE இனர் சுற்றிவளைக்கப்பட்டது முழு உலகுக்குமே தெரிந்தவிடயமாக இருந்தது. ஆயினும் LTTE இனர் தங்கள் இறுதிமூச்சுவரை அதனை மறுத்துக்கொன்டிருந்தார்கள். தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று பிரகடனப் படுத்திக்கொன்டே இருந்தார்கள் - தாங்கள் அழிக்கப்படும்வரை.
ReplyDeleteஇவனும் இவனைப் போன்றவர்களும் அப்படித்தான் உலகம் அறிந்த உண்மையை மூடிமறைக்கப் பார்க்கின்றார்கள்.
இவனுகிட்ட கேக்கனும், முதலாவது இவன் பொம்புலைகளுட அந்த உருப்ப பார்த்து இருக்கான் எண்டு
ReplyDeleteRubbish Terror Monk
ReplyDelete