உதய கம்மன்பில 10.000 வாக்குகளை பெற்றால், எனது காதை வெட்டி கையில் கொடுப்பேன் - மரிக்கார்
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனியாக போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகளை எடுத்துக் காட்டட்டும், நான் எனது காதை வெட்டி கையில் தருகின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
உதய கம்மன்பிலவின் கட்சிக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? அவருடைய கட்சியில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்?
உதய கம்மன்பில எம்.பி. மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபட்டு கரைசேறும் ஒருவராகவே காணப்படுகின்றார்.
முடியுமானால், அவர் தனியாக போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகளை எடுத்துக் காட்டட்டும். நான் எனது காதை வெட்டி கையில் தருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உதய கம்மன் வில வைப் போன்ற அரசியல்வாதிகள் பல்லின சமூகம் வாழும் சிறீலங்காவுக்கு முற்றிலும் பொருத்தமற்ற வர்கள்.
ReplyDelete