அனர்த்தம் என்றால் 011 245 4576, 011 258 7229 ஆகிய இலக்கங்களுக்கு அவசரமாக அழையுங்கள
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையடுத்து ஆங்காங்கே மண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து குறித்த அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்வதற்கு இரு தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 011 245 4576 மற்றும் 011 258 7229 ஆகிய இலக்கங்களுக்கு அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment