Header Ads



Dr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செய்­தியை முதன் முதலில் வெளி­யிட்ட சிங்­கள ஊடகம் ஒன்று நெருக்­க­டியை  எதிர்­நோக்­க­வுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.மேற்­படி விடயம் தொடர்­பாக குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம், எதிர்­வரும் 27 ஆம் திகதி குரு­நாகல் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ள அறிக்­கையைத் தொடர்ந்தே சம்­பந்­தப்­பட்ட ஊடகம் வெளி­யிட்ட முன்­பக்க செய்தி தொடர்­பாக நெருக்­க­டியைச் சந்­திக்க இருப்­ப­தாக மற்­றொரு சிங்­கள ஊடகம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

டாக்டர் ஷாபி­யினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகச் சுமத்­தப்­படும் மேற்­படி விடயம் தொடர்­பாக பொலிஸ்மா அதி­ப­ரினால் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்­திற்கு விடுக்­கப்­பட்ட பணிப்­பு­ரைக்­க­மைய மேற்­கொண்ட விசா­ரணை அறிக்கை எதிர்­வரும் 27 ஆம் திகதி குரு­நாகல் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

தயா­ரிக்­கப்­பட்­டுள்ள மேற்­படி அறிக்­கையில் டாக்டர் ஷாபி அத்­த­கைய குற்றச் செயல் ஒன்றில் ஈடு­பட்­ட­தாக இது­வ­ரையும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் அதற்­க­மை­யவே குறித்த பத்­தி­ரிகை நெருக்­க­டியை எதிர்­நோக்­க­வுள்­ள­தாக அந்த பத்­தி­ரிகைச் செய்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

குறித்த பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்­தியைத் தொடர்ந்தே பிக்கு ஒருவர் சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் அதனால் சுமார் 1500 பொலிஸார் மேல­தி­க­மாக சேவையில் ஈடு­ப­டுத்த நேர்ந்­த­தா­கவும் அர­சாங்­கத்­தி­லுள்ள சில அமைச்­சர்கள் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய நேர்ந்­த­தா­கவும் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல் ஒன்று உரு­வாகும் நிலை ஏற்­பட்­ட­தா­கவும் இக்­கா­ர­ணி­களை முன்­வைத்தே மேற்­படி விடயம் குறித்து நீதி­மன்றம் விசேட கவனம் செலுத்­த­வுள்­ள­தா­கவும் இப்­பத்­தி­ரிகைச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் குறித்த ஊடக நிறு­வ­னத்­திற்கும் அதனை எழு­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கும் எதி­ராக ஐ.ஸீ.ஸீ.பி.ஆர் சட்­டத்தின் கீழ் வழக்குத் தொடர்­வ­தற்குப் பெரும்­பாலும் வாய்ப்­புள்­ள­தா­கவும் அறிய வந்­துள்­ள­தாக அச்செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  குறித்த செய்­தியை வழங்­கி­ய­தாகத் தெரி­விக்­கப்­படும் பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கும் மேற்­படி முறைப்­பாட்டின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்­புள்­ள­தா­கவும் தெரிவிக்கப் படுகிறது. குறித்த ஊடகவியலாளர், மேற்படி பிரதி பொலிஸ்மா அதிபரே தனக்கு இது விடயமான தகவல்களைத் தந்ததாக ஊடகவியலாளர் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருவதாக அந்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
-Vidivelli

8 comments:

  1. Dr.Shafee must file a case against this media immediately.

    ReplyDelete
  2. Masha Allah உண்மைய் ஜெயிக்கும்

    ReplyDelete
  3. உதயன் கம்மன்பிலவ சொல்லிவிட்டார் குடும்ப கட்டுப்பாட்டை பலாத்காரமாக பண்ணுவது அரசு வைத்தியசாலையில் தாதிகலின் வர்புரத்தலினால் என.அவருக்கே உண்மை புரிந்தால் முழு சிங்கள மக்களுக்கும் புரிந்தது போல்தான்

    ReplyDelete
  4. Justice has to be alive and common for all other then being abused as minority and majority.....

    ReplyDelete
  5. It will never materialize. Eventually no charges will be laid against these media mafias. It will be like Thajudeen case, nothing will ever happen.

    ReplyDelete
  6. Very Good!
    Specially need to take maximum action against that fake journalist and media. Then, this should be lesson for them and reset of the fake journalists and media.

    ReplyDelete
  7. When our mother land Sri Lanka is going to flourish as at least a “simple” country in the world.

    ReplyDelete

Powered by Blogger.