Header Ads



நம் இளைஞர்களை இழுத்துச்சென்ற, காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்...?

ஸர்மிளா செய்யித் -

2002இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, தொலைகாட்சி பார்ப்பது ‘ஹராம்” என்று பிரசாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயற்பாடு, பிரசாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று, அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.   

கறுப்பு அபாயாக்களையும் நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து, இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி வாழ்ந்த மண்ணில், பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு, பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது, பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை, வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலாயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும், கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜும்ஆக்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துப் பிரசாரம் செய்யப்பட்டது.   

இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இப்படித்தான் நடந்தது.   

திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கான நிதி, அரபு நாடுகளிலிருந்து வசூலாகி வந்தது. வெறும் நூறோ இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாகச் செலுத்தி, நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மதக் கல்வி அவசியமேயின்றி முன்னிருத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள், இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள், சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய, பாங்கு முழங்கிக் கொண்டு சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்து நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு, மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்துப்போட்டு இறைச்சிக்கறி சமைத்த வாசம், எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்தெடுத்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.   

இவர்களுக்குள் இந்தச் சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடீரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.   

சிங்கள மக்கள், சீத்தையையா அணிகின்றார்கள்? அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையா? நாங்கள் அபாயா அணிந்தால், தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம், வரிசையாக கண்களில் வந்துபோகின்றன.   

மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ட்ரிமிச செயற்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.   

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை, மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும், சமூக ஊடகங்களிலும் வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்ட போதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.   

இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.   
இலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது. தப்பிக்கும் தந்திரம், குற்றஞ்சுமத்துதல், எதிர்காலம் குறித்த அச்சம்   
இலங்கை முஸ்லிம்கள் அனைவரும், தீவிரவாதத்துக்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல் அச்சம் சார்ந்தது.   

குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம், தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றஞ்சுமத்தல் உளவியல் சார்ந்தவை.   

தீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.   

தீவிரவாதக் கருத்துகளுக்கு எதிராக, கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாதக் கருத்துகளை, நமக்கென்ன என்றும் யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள், இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்துக்குக் கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கிகரித்தவர்கள், அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது முரணில்லையா? வழக்கம்போல அரச சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக்கொள்ள விளைவதால், எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக்கொள்ள முடியும்? அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்.   

இந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.   

இந்த உண்மைகள் கசப்பானவைதான். மருந்துகள் போல. நோய் தீர விரும்பினால் ஒவ்வொருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்குச் சிகிச்சையளிப்பதும் சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.  

22 comments:

  1. Engalukku noya illa unakku noya endu Allah marunthu podum pothu theriyum. until that day talk whatever you want. I'm mesmerizing while think about your parents how they teach you Islam and practices of prophet. Shame on you. I think the nobal prize has already given to malala. If you want you can try once. If you think we are in extremism Alhamdulillah it's fine. Hasbunallahu Wanimal Wakeel.

    ReplyDelete
  2. தயவு செய்து இவளின் பதிவுகளை பகிராதீர்கள்.
    அவை சிறந்ததாகவோ அல்லது நடுநிலை பதிவுகளாக இருந்தாலும் சரியே!!!
    இவளின் வரலாற்றை உணர்ந்தவர்களுக்கு தெரியும் இவள் எப்படிப்பட்ட விஷம் என்று...

    இவளின் பித்னாவை விட்டும் அல்லாஹ் எம்மை காப்பானாக

    ReplyDelete
  3. Sharmila

    I don't know how old you are but in 1983 when I was back
    from a European city one gentleman from a religious org
    came to see me and was asking me with so much joy on his
    face if in that country people are coming to Islam and I
    said no there's no truth in it ! He didn't believe me and
    said may be I don't know about it ! I have come from the
    capital city of that country and someone who can never
    even imagine to visit such a country insisted that people
    in that country are converting to Islam ! What do you
    think you can do to explain to this kind of people who
    takes pride in false information simply because it was
    about Islam ? In the name of Islam , you say anything ,
    they like it ! You will have to go about fifty years
    back to find the roots of today's situation. Trying to
    start with Abhaya and Tvs will not do the job ! There
    are more to this foolish and mad journey in the name of
    Islam ! Islam does not say to behave foolishly and
    madly over the rest of the world !

    ReplyDelete
  4. சர்மிளா முஸ்லிம்களின் பிரச்சனையை பார்த்துக்கொள்ள சமூகத்தில் அக்கரையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் உங்கள் பாடலை நிறுத்துங்கள்.

    ReplyDelete
  5. கவனம் இவள் நிச்சயமாக ஒரு புல்லுருவியே . தற்போதைய நிலமைக்கு. தகுந்த மாதிரி கருத்து சொல்வதால் இவளது இஸ்லாத்திக்கு எதிரான சிந்தனை களுக்கு துணை போக நாம் தயார் இல்லை

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சகோதரி சர்மிளா செய்யத் அவர்களே! நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாமே..ஒரு சில ஊர்களில், ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட விஷயங்களை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் நடந்ததாக கற்பனை செய்து எழுதி இருக்கிறீர்கள். " மதக் கல்வி அவசியமே இன்றி முன்னிறுத்தப்பட்டது" என்பதன் மூலம் எதை சொல்ல வருகிறீர்கள்? உங்கள் கட்டுரை, முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்களாகவே பார்க்க விரும்பும் (வாயளவில்) இனவாதிகளின் கருத்துக்களுக்கு துணை போவதாக அல்லவா அமைந்திருக்கிறது.

    ReplyDelete

  8. சகோதரி சர்மிளா அவர்களே! நீங்கள் யாரை நோக்கி அம்பை பாய்ச்சுகிறீர்கள் என்பதும், இந்த நேரத்தில் இவ்வாறான எண்ணமும் கட்டுரையும் தேவைதானா என்பதும் ஒரு கேள்விக்குறியாகும். உங்கள் கருத்துக்கு இதோபதில்.

    இலங்கை இஸ்லாமிய ஆதிபத்தியத்தின் கீழ் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இருந்தால், உலக இஸ்லாமிய எதிர்ப்பு வாதம் இங்கும் துளிர்விடுகின்ற போதும் அதை முளயிலே கிள்ளி எறிந்திருக்க முடிந்திருக்கும். ஆனாலும் தீவிரவாத கருத்துக்கள் ஊசலாடிய போது, நம் அரசியல்வாதிகளும் உலமா சபையும் சிங்கள அரசிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் முறைப்பாடுகள் ஆதாரத்தோடும் பெயர்ப்பட்டியலோடும் சமர்ப்பிக்கப்பட்டும் அது கருத்தில் கொள்ளப்படாத நிலையில் குண்டுகளாக சிதறியது. இதன் பின்னணி என்ன என்பதை உங்களால் புறிந்து கொள்ள முடியாமல் பொல்லுக்குடுத்து அடிவாங்க சொல்லுகின்ற கட்டுரை எழுதுவதன் நோக்கம்தான் என்ன?

    பிறப்பு எப்படி இருந்தாலும், வளர்ப்பில் நெறிபிரண்டு வளர்ந்த இளைஞர்களை அரசியல்வாதிகளாலோ,அறிஞர்களாலோ,உலமாக்களாலோ,அல்லது ஊர்மக்களாலோ ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் நீங்கள் புறிந்து கொள்ள வேண்டும்.
    தவறுகளும்,குற்றங்களும்,பிளைகளும் கண்டறியப்படுகின்ற போதுதானே அதுமீண்டும் நடவாதிருக்க சப்தங்களும்,சட்டங்களும்,திட்டங்களும்,திருத்தங்களும் சீற்றம் பெருகின்றதென்பதை உங்களால் புறிந்து கொள்ள முடியவில்லையா?எனவே போதும் உங்கள் கட்டுரை.பேனாவை உடைத்தெறியுங்கள்.

    இருதலைக்கொள்ளி எறும்புகளாக அகப்பட்ட முஸ்லிம்களின் நிலையுணர்ந்து, தலைபோகும் தறுவாயில் தலைப்பாகை எதற்கு என்று தங்கள் பட்டம்பதவிகளை தூக்கி எறிந்த நம் அரசியல் வாதிகளின் ஒற்றுமையை பாராட்டி எழுதாத பேனாக்கள் எங்களுக்கு தேவையில்லை.எனவே நிறுத்துங்கள் போதும் உங்கள் கட்டுரை.

    கோவித்த பொண்டாட்டிக்கு கைபட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம் என்ற நிலையில் இன்று முஸ்லிம் அரசியல் வாதிகளும், உலமா சபையும், முஸ்லிம் அமைப்புக்களும் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பாம்புக்கு பால்வார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் வேதனையிலும் இருக்கின்றார்கள். அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்தான் உங்களை போன்றவர்களுக்கு அந்த வலி தெரியும்.எனவே போதும் நிறுத்துங்கள் உங்கள் பப்ளிசிட்டியை.

    மலேசியாவிலிருந்து.....


    ReplyDelete
  9. iwalay adithu kollungal.iwel oru vifachcharu

    ReplyDelete
  10. The actions of those of you who profit by misrepresenting society are nothing more than prostitution.

    When Muslims women are mistreated in their daily activities such as when traveling in public transport, at hospitals, at offices and in many other common places, and also , in a falsely perpetrated case, when a poor woman was arrested and locked up in jail for days even, you so-called women activists, never had raised your voices against this discrimination. Now you are coming out to take advantage of the situation.

    You are right that we can not just say that whoever commits terrorizing activities, are not part of us when they are from Islamic society. But, you poor lady still, need a correct understanding of ongoing discrimination against Sri Lankan Muslim. Terrorists are being created due to the side effect of mistreatments. Sri Lanka has been proving this as being a chauvinist country since the day it obtained the independent. If you are genuine, you must raise your voice in support of oppressed people

    ReplyDelete
  11. The problem is we have plenty of speakers and writers but don't have enough practising Muslims. That can be seen when you go to the Masjid for prayers. Only a few people pray regularly and others just name sake Muslims who pray just once a week in many villages and towns.

    ReplyDelete
  12. Parpathatku mananoyali mathiri ullar yar ethu

    ReplyDelete
  13. Helo mis sharmila onakellam maruwathi wekkawe padathu ithu oru public news sutty konjam menmaya pesuran . Motu katha kathakatheenga ippa ikura prachina timela onaku nobal price ellam kedakathu k . Kawanama iru oorku thediwanthu senjitu povanhal engada podiyanmaar . And jaffna newskitta sollikurathu ithupola news a poda waanam pls . Islam pathi sariya teriyatha aatkalum ithapathu pilayataan nenapanga . Ongada websita muslims mattum pakurathu ille so yours mistek

    ReplyDelete
  14. Well said sharmila, what you said in this article is true ,we are now harvesting what we planted before 30 years in the name of islam,please don’t stop writing and write more and more to awaken our Muslim community.

    ReplyDelete
  15. நாகரீகம் என நினைத்து அநாகரீகமாக வாழும் முஸ்லீம் பெயர் தாங்கி மங்கையே... நீ நினைப்பதல்ல இஸ்லாம்...நீ கற்றதல்ல இஸ்லாம்...
    உனக்கு உடன்பட்டதெல்லாம் இஸ்லாத்துக்கு உடன்படாதவை. மார்க்கம் பேச மார்க்கப்பற்றுள்ள பலர் இருக்கிறார்கள்.தற்போதைய சூழ்நிலையை உனக்கு சாதகமாக்கி கொண்டு கண்டது நிண்டதெல்லாம் நீ பேச வராதே. பொத்திக்கொண்டு இருப்பதே சாலச்சிறந்தது .

    ReplyDelete
  16. ஸஹ்றான் போன்றோர் எப்படி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் ஆபத்தானவர்களோ அதே போல் இந்த சர்மிலா போன்றோரும் ஆபத்தானவர்கள்.
    இவர்கள் பின்கதவால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காட்டிக் கொடுப்பவர்கள்.
    இஸ்லாமிய விரோத சக்திகள் எப்படி ஸஹ்றானை பயன்படுத்திக் கொண்டதோ அதேபோல் இவர்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இஸ்லாமிய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  17. என்.ஜி.கே அவர்களே. நீங்கள் எழுதியவை விவாதமா? வெறுப்பா? அச்சுறுத்துவதன் மூலமல்ல இழிவுபடுத்துவதன் மூலமல்ல நிதானமும் அறிவுபூர்வமுமான விவாதங்களின் மூலம் மட்டுமே முஸ்லிம் மக்களை விடுவிக்க முடியும். ஆனால் நீங்கள் முஸ்லிம் விரோதிகள் வைக்கிற குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கிறவராக இருக்கிறீங்களே? இதுதான் உங்கள் இனபற்றா? உங்கள் வார்த்தைகள் மனித விழுமியங்களையும் நடைமுறையில் உள்ள சைபர் சட்டத்தையும் அவமதிக்கிற செயலல்லவா? இலங்கையில் எல்லா இனங்களிலும் உங்களைப்போன்ற கருத்து சஹரான்கள் இருப்பதுதான் காலத்தின் சோகம்.

    ReplyDelete
  18. By reading the low grade comments attributed to this writer using unethical words, I am not surprised that Muslims are frowned upon everywhere. Muslims must realize that everyone has the right of freedom of expression and any comments or criticism should be directed at the issues only, not to the writer. Personal attacks will only weaken the arguments if any.
    Yesterday there was a news item in this web page about a speech by MP Bimal Rathnayake of JVP and Jaffna Muslim promptly titled it as speech of hatred. I made a comment emphasizing the necessity of treating his speech as a forum and mentioned about the treatment this writer got for exercising her right of freedom of speech years ago. Jaffna Muslim can do a service to all SL Muslims by providing a forum for discussions of different opinions and views. Muslims can earn much needed respect by taking part in healthy debates instead of throwing mud at each other.

    ReplyDelete
  19. why such a hatred and bigotry in some comments here.
    @NGK- look at your choice of word man. isn't that very much inappropriate?
    @JM- Please regulate the comments, please!

    ReplyDelete
  20. GUYS JUST LOOK AT HER FACE, Y JAFFNA MUSLIM PUBLISHED THIS KIND WOMAN STATEMENT. U DONT HAVE ANY OTHER NEWS....

    ReplyDelete
  21. Wekkam illaya Iwalda article la publish panna

    ReplyDelete

Powered by Blogger.