தற்கொலைதாரிகளின் தந்தையை, மஹிந்தவிற்கும் தெரியும் - ரிசாட்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளின் தந்தையான இப்ராஹிம் என்பவர் தமக்கும் மட்டும் தெரிந்தவர் கிடையாது என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் என்பவர் கொழும்பு வர்த்தகர் சங்கத்தின் தலைவராக கடமையாற்றியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிரில் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இப்ராஹிமை தெரியுமா என நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஆசூ மாரசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது ஆம் தமக்கு தெரியும் எனவும், தமக்கு மட்டுமல்ல பல்வேறு அரசியல்வாதிகளுக்கு இப்ராஹிமைத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுடன் அவர் பழகியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படங்களை சாட்சியமாக சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் இவ்வாறான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டள் தந்தை தண்டிக்கப்படுவது நியாயம்.
ReplyDeleteஆனால் சிறுவர் வயதை தாண்டிய நபர்கள் இவ்வாறான குற்றச் செயல்கள் செய்தால் தந்தை தண்டிக்கப்படுவது எப்படி நியாயம்?