ஹலீமும், கபீரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்க முடிவு - முஸ்லிம்களும் விமர்சிப்பதாக கவலை
அமைச்சுப் பதவிகளை தற்காலிகமாக இராஜினாமாச் செய்த ஒன்பது பேரில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ. ஹலீம். கபீர் ஹாஷிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கமுடிவு செய்துள்ளனர்.
மஹாசங்கத்தினர்கள் எமது நிலைப்பாட்டை புரிந்து கொண்டதன் காரணமாகவே நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்குத் தீர்மானித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஹலீம் கூறினார்.
"முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதியே நாம் கூட்டாக பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தோம் ஆனால் இன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு குழப்பகரமான நிலை தோன்றியிருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் எம்மை விமர்சித்து வருவதன் காரணமாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்" என அவர் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து அந்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியபோதிலும், முஸ்லிம் தலைவர்களின் கூட்டுத் தீர்மானத்திற்கு மதிப்பளித்த தமக்குச் சமூகத்திலிருந்து உரிய வரவேற்பும் மரியாதையும் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்வது பற்றித் தங்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். நாம் இருவரும் விரைவில் தத்தம் அமைச்சுப் பொறுப்புகளை மீள ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. பௌத்த மஹா சங்கத்தினரின் ஆலோசனைக் கேற்ப நடந்துகொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.தங்களது இந்த முடிவு தொடர்பாக மேலும் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் கூறியதாவது:
முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகள் இராஜினாமா செய்ததன் பின் மஹா சங்கத்தினர் மட்டுமன்றி நாட்டிலுள்ள அநேகமான தரப்பினர் மீண்டும் பதவியை ஏற்கவேண்டுமென இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்களது இராஜினாமா சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்த இடமுண்டு. இதனால் நாட்டுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படலாம். இதில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம் , நான் உட்பட இருவரும் கணிசமானளவு சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்குகளைக் கொண்டு இருப்பவர்கள்.
எனவே இது தொடர்பில் எங்களை ஆதரித்த சிங்கள ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து மீண்டும் பதவியைப் பொறுப்பேற்று நாட்டுக்கு தம் பிரதேசத்துக்கும் சேவைகள் செய்ய வேண்டும் எனக் கோரி அதிகளவு அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
குற்றம் சாட்டப்படாத அமைச்சர் தமது பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்று மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்கள். தற்போது முஸ்லிம்கள் மீதான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதற்கு தலைமை தாங்குவதற்கும் பதவி துறந்த குற்றம் சாட்டப்படாத முஸ்லிம் அமைச்சர்கள்கள் மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்ற கருத்து பலமாகப் பேசப்பட்டு வருகிறது. மத்ரஸா கல்வி விதி முறை, விவாகம், விவாகரத்து சட்டம், ஹஜ் விவகாரம் தொடர்பாக சட்ட மூலம் உட்பட பல விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச் சந்தர்ப்பத்தில் எங்களுடைய சமுதாயத்திலிருந்து எங்களை விமர்சிப்பதிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதிலும் சிலர் ஈடுபடுவது எமக்கு பெரும் மனவேதனையைத் தருகிறது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் கூடிய கூட்டத்தில் நாங்கள் எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவே அனைவரும் பதவியைத் துறந்தோம். ஆனால் பாராளுமன்ற தெரிவுக் குழுவிலும் சிங்களப் பத்திரிகையிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்புரை செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று பிந்திக்கிடைத்த செய்திகளின்படி,மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த வாரம் இந்தக் குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(எம்.ஏ.எம். நிலாம்,
Addiction for power
ReplyDeleteWell done “முஸ்லிம் கூட்டணி”
ReplyDeleteபணம்-பதவிகளுக்கு முன்னால் “முஸ்லிம் கூட்டணி”யால் 2 வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.
(நான் ஏற்கனவே பல தடவைகள் comments எழதியவை உண்மை என நிரூபித்த இந்த முஸ்லிம் கோமாளிகளுக்கு நன்றி)
இவர்களின் கதையை வைத்து “பாராலுமன்றத்தில் கோமாளிகள” என்று ஒரு நகைசுவை படம் எடுக்கலாம் போல.
எமது ஒற்றுமையை சின்னாபின்னாமாக்க இனவாதிகலும்,இனவாத ஊடகங்களும் விரிக்கும் வலையில் மாட்டிவிடாதிர்கல்.மகா நாயக்கர்கள் சொல்வதை நீங்கள் கேட்டு மதிப்பு கொடுக்கிரீர்கல்.ஏன் மகா நாயக்கர்கலுக்கு இனவாத ஊடகம்,இனவாத பிக்குமார்,இனவாத அரசியல் வாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.நாட்டின் பெயருக்கு நீங்கல் ராஜினாமா செய்தது பாதிப்பு என கூறும் அவர்கள் திகன,அம்பாறை,ஜிந்தோட்டை,குருநாகல்,புத்தளம் இன்னும் சிறிய,சிறிய அன்மையில் ஏற்பட்ட கலவரங்களும் அனைத்து வெளி நாட்டு ஊடங்களில் தலைப்புச் செய்திகலாக வந்தது,இவைகளும் நாட்டுக்கு கெட்ட பெயர்தான்,எனவே,ஏன் மகா நாயக்கர்கல் கலவரங்களை தடுக்க முன்வரவில்லை.எது எப்படியோ பதவியை மீண்டும் எடுப்பது,எடுக்காமல் இருப்பது வேறு விடயம்.ஆனால் நீங்கள் அனைவரும் காட்டிய ஒற்றுமையை மீண்டும் விட்டு விடாமல் தொடர்ச்சியாக சமூகத்துக்கு பிரச்சினைகள் வரும் போதேல்லாம் சேர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteபதவி எடுத்தால் பறவாயில்லை , தேறுதல் வரும் சமயம் ஒரு கொடியின் கீழ் போட்டி இடவும்.
ReplyDeleteTHEY SHOULD ASK ASSUARENCE
ReplyDeleteOF THE SAFETY OF PEOPLE ...IF GVT. TAKECMEADURES THEN CAN JOIN BACK
முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு எதிர்காலம் ஆகியவற்றை முன்வைத்தே ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் இரு ஆளுனர்கள் இராஜினாமா செய்தனர். குற்றங்கள் நிரூபிக்கப்படல் வேண்டும். நாங்கள் எங்களது நோக்கத்தினை அடையாது மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள தூது அனுப்பினால் அல்லது வேண்டுகோனை ஏற்றுக்கொண்டால் உள்ளுரில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் எமக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். இம்முயற்சி சிலவேளைகளில் "Joker of the Year 2019" என்ற பட்டத்;தையும் தந்துவிடும். சா(ஜா)க்கிரதை.
ReplyDeleteWhat a drama :)
ReplyDeletethen what about their 10 demands? do they laugh at musmim ummah?
ReplyDeleteStand on your grounds firmly.Do not get discouraged. Else, it is a shame.
ReplyDeleteIf the safety for people is assured by measures then it is wise to join back for the good will of this nation.
ReplyDeleteமுஸ்லீம் மக்களின் மனதில் குழப்பம் ஒன்றும் இல்லை.உங்கள் மனத்தில்தான் குழப்பம்.வெட்கமாக இருகிறது.சரி போய் உங்கள் பதவிகளை உடன் எடுங்கள்.வேறு யாரும் தட்டிக்கொண்டு போய் விடப்போகிறார்கள்.
ReplyDelete